இட்லி கடையில் எதிர்பாரா டுவிஸ்ட்.. வெயிட்டான நடிகருடன் மாஸ் காட்டும் தனுஷ்..!!
Author: Udayachandran RadhaKrishnan1 February 2025, 7:09 pm
தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் இட்லி கடை. இந்த படத்தில் நித்யா மேனன், ராஜ்கிரண் என பலர் நடித்து வரும் தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது
தற்போது படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். இது தொடர்பான போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படியுங்க: சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு அடித்த மெகா அதிர்ஷ்டம்…கொத்தா தூக்கிய பிரபல இயக்குனர்…!
வரும் ஏப்ரல் 10ஆம் தேதி இட்லி கடை படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். அதே நாளில் குட் பேட் அக்லி படமும் வெளியாக உள்ளது.

அஜித்துக்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் நடித்திருந்த நிலையில், இட்லி கடை படத்தில் தனுஷ்க்கு எதிராக வில்லனாக நடிக்கிறார். இதில் குத்துச்சண்டை வீரராக அருண் விஜய் நடிப்பது போன்ற காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தாண்டு தனுஷ்க்கு ஏராளமான படங்கள் வெளியாக உள்ளது,. குபேரா, பாலிவுட்டில் தேரே இஷ்க் மெயின் படம் என அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.