ஃபர்ஸ்ட் நைட் எப்போ? ரசிகரின் கேள்வியால் கடுப்பான தனுஷ் பட நடிகை..!
Author: Vignesh21 September 2023, 6:59 pm
தற்போதைய காலத்தில், டிவியில் வரும் சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரவேற்பு தூண்டுதலால் Sunmusic, ஆதித்யா தவிர எல்லா Channelகளிலும் எதோ ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்தி சட்டை கிழிய சண்டை போட்டு வருகின்றனர். இவர்களில் சண்டையில் குளிர் காய்வது என்னவோ மக்கள் தான். தற்போது நிறைய சேனல்களில் வித்தியாசமான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர்.
அந்தவகையில், தமிழ் சினிமவில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் வித்யா பிரதீப் . தடம் என்னும் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தனது முதல் படத்திலையே ரசிகர்களின் கவனத்தை பெற்று நடிகையாக உருவானார். அருண் விஜய்யின் தடம், தனுஷின் மாரி 2, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
முன்னதாக, பிரபல தொலைகாட்சியில் நாயகி என்ற சீரியலில் நடித்து வந்தார் நடிகை வித்யா பிரதீப். வித்யா, நடிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்த வித்யா பிரதீப்பிற்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது.
இருப்பினும் மாடலிங் துறையில் பிசியாக வலம் வரும் அவ்வப்போது, இவரது ஹாட் போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருவார். தற்போது, பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவரிடம் உங்கள் வாழ்க்கையில் நடந்த தர்ம சங்கடமான விஷயம் எது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த வித்யா பிரதீப், தான் நாயகி சீரியலில் நடித்து வந்த போது சிலர் தன்னிடம் சீரியலில் உங்களுக்கும் ஹீரோவுக்கும் எப்ப கல்யாணம் என்று கேட்டு வந்தார்கள். ஒரு கட்டத்தில் சீரியலில் கல்யாணம் முடிந்த பிறகு சாந்தி முகூர்த்தம் தள்ளிப்போகும். அதனால் சில ரசிகர்கள் என்னிடம் எப்போது உங்களுக்கும் அவருக்கும் பஸ்ட் நைட் என்று கேள்வி கேட்பார்கள். பொது இடங்களில் இது போன்ற கேள்வி கேட்பதால் தர்ம சங்கடம் ஏற்படும் என்று நடிகை வித்யா பிரதீப் தெரிவித்துள்ளார்.