நயன்தாராவுக்கு கோபம் வந்தால் இவ்வளவு கேவலமாக நடந்துக்கொள்வாரா?

Author:
18 October 2024, 9:55 am

லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். அதற்கு முன்னதாக மலையாளத்தை சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

nayanthara

முன்னதாக இவர் கேரள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு நடிகையாக இன்று முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, தமிழ் , மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை நயன்தாரா ஹிந்தியில் பிரபல நடிகரான ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகம் ஆனார்.

nayanthara

தற்போது நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக லயன் , மூக்குத்தி அம்மன் 2 , ஊர் குருவி, மண்ணாங்கட்டி, தனி ஒருவன் 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதனிடையே நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

nayanthara 3

இந்நிலையில் நடிகை நயன்தாரா கோபம் வந்தால் மிகவும் மோசமாக நடந்துக்கொள்ளவாராம். அது குறித்த செய்து ஒன்று தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. அதாவது,

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நேர்காணலில் பேசிய தொகுப்பாளினி டிடி தனக்கு தனக்கு நடந்த அவமானத்தை குறித்து மனம் திறந்து பேசினார். நான் ஒரு பிரபலமான நடிகையை நேர்காணல் எடுத்தேன். அந்த நேரத்தில் அவங்களும் நானும் ஒரே நிறத்தில் சேலை அணிந்து வந்திருந்தோம். அதைப் பார்த்ததும் கடுப்பான அந்த பிரபலமான நடிகை என்னுடைய ஆடையை உடனடியாக மாற்ற சொன்னார்.

nayanthara

காரணம் அவரை விட… அவருக்கு ஈக்குவலாக நான் அழகாக தெரிகிறேன் என்ற காரணத்தால் அவர் உடனடியாக என் ஆடையை மாற்ற சொன்னார். ஆனால் நான் முடியவே முடியாது என ஸ்ட்ரிக்ட் சொல்லி விட்டேன் என தொகுப்பாளினி தீதி அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: சூப்பர் ஸ்டாரை கொலை செய்ய திட்டம்… 70 பேருடன் 24 மணி நேர கண்காணிப்பு !

அதை வைத்து பார்த்தோமானால் நயன்தாரா மற்றும் டிடி இருவரும் ஒரு நேர்காணலின் போது தான் இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் சேலை அணிந்து வந்திருந்தார்கள். ஒருவேளை டிடி மறைமுகமாக சொல்லும் அந்த பிரபலமான நடிகை நயன்தாரா தானோ என நெட்டிசன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஒருவேளை அது நயன்தாராவாக இருந்தால் அவர் எவ்வளவு மோசமான எண்ணம் கொண்டவரா? என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

  • Pushpa 2 Kissik song வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!
  • Views: - 457

    1

    0