விஜய் கூட நடிக்க Adjustment க்கு OK சொல்லியிருந்தா..- தளபதி கூட டூயட் பாடியிருப்பேன்..-புலம்பி தள்ளும் நடிகை..!

Author: Vignesh
19 June 2023, 12:45 pm

அட்ஜஸ்ட்மென்ட் என்பது தமிழ் சினிமாவில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மிகப் பெரிய ஒரு சவாலாக இருந்து வருகிறது. அதை தாண்டி எத்தனையோ ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள், துணை நடிகைகள் தங்கள் நினைத்த லட்சியத்தை அடைந்து இருக்கிறார்கள்.

பெரும்பாலும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அவர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்தால் மட்டுமே ஒரு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் தான் இன்றைய தமிழ் சினிமா இருந்து வரும் இருந்து வருகிறது. இந்த நிலை சினிமாவில் மட்டும் இல்லாமல் அனைத்து துணைகளிலும் துறைகளிலும் இந்த பிரச்சனை நடந்து கொண்டே தான் இருக்கிறது.

balambika-updatenews360

ஒரு நடிகை அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து மிகவும் வெளிப்படையாக பேசி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. பாலாம்பிகா என்ற நடிகை ஒரு சில படங்களிலும் பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவருடைய தந்தை பழம்பெரும் இயக்குனரான கே எஸ் கோபாலகிருஷ்ணன் இடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் தன் மகளையும் ஒரு நடிகையாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சினிமாவில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறார் இவருடைய தந்தை. பாலாம்பிகா தம்பிக்கு ஒரு பாட்டு என்ற படத்தில் முரளிக்கு ஜோடியாக முதன்முறையாக கதாநாயகியாக இவர் நடித்திருந்தார்.

balambika-updatenews360

அதனை அடுத்து, பல படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால், அதற்கு தன்னுடைய அப்பா மறுத்துவிட்டதாகவும், பாலாம்பிகா தெரிவித்துள்ளார். இதனிடையே, நடிகர் விஜய்க்கு ஜோடியாகவும், பிரசாந்துக்கு ஜோடியாகவும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த நிலையில், அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் அவர்களுடன் நடிக்க முடியும் என்ற கட்டாயத்தில் அவருடைய தந்தை அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துழைக்க வில்லை. அதனால், அந்த படங்கள் எல்லாம் தன்னை விட்டு போய்விட்டது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், விஜய்யுடன் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை தவறவிட்டு விடாமல் நடித்திருந்தால், தன்னுடைய ரேஞ்சே வேற மாதிரி இருந்திருக்கும் எல்லாத்துக்கும் காரணம் தன் அப்பா தான் என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதனை கூறும் போது குறிப்பிட்டு பேசிய நடிகை ஷகிலா ஒருவேளை அட்ஜஸ்ட்மென்ட்க்கு சம்மதிச்சுக்கலாம் என்று நினைக்கிறாயா கேள்வி எழுப்பினார். அதற்கு பாலாம்பிகா இதற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எல்லோரும் தான் நடிக்கிறாங்க தன் தந்தை தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்று புலம்பி தள்ளி இருக்கிறார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ