புஷ்பா 2 படம் வெளியாகி வசூலில் மாபெரும் சாதனையை படைத்து வருகிறது. படம் வெளியான அன்று ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு அல்லு அர்ஜூன் சென்றிருந்தார்.
அந்த நேரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார், அவரது மகன் ஸ்ரீதேஜூ படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அல்லு அர்ஜூனை போலீசார் கைது செய்தனர். இதற்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் சிறையில் வைக்கப்பட்ட அல்லுவுக்கு அன்றே ஜாமீனும் கிடைத்தது. இதையடுத்து அவர் விடுதலையானார்.
இதையும் படியுங்க: காஞ்சனா 4ல் தளபதி விஜய்? சஸ்பென்ஸ் வைக்கும் லாரன்ஸ்!!
அல்லு அர்ஜூன் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு அவரை கைது செய்தது தவறு என அனைத்து தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.
இந்தநிலையில் பெண் ரசிகை மரணத்தை தொடர்ந்து அவரது மகனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தெலுங்கானா காவல்துறை அல்லு அர்ஜூன் ஜாமீன் மனு மீது மேல்முறையீடு செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா, அல்லு அர்ஜுனின் கைதைக்கே எதிர்ப்பு தெரிவித்து அனைத்து நடிகர்-நடிகைகளும் கண்டிக்க வேண்டும்.
ஸ்ரீதேவி படத்தின் ஷூட்டிங்கின் போது அவரை பார்க்க வந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தார்கள். அதற்காக இப்போது ஸ்ரீதேவியை கைது செய்ய தெலங்கானா போலீசார் சொர்க்கத்துக்குப் போவார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.