அப்போ.. எல்லாமே உண்மையா கோபால்?.. திருமணம் ஆகாத நடிகையுடன் நெருக்கம் காட்டும் விஜய்..!
Author: Vignesh21 January 2023, 7:30 pm
விஜய்யின் எந்த பட நிகழ்ச்சி என்றாலும் அவரது மனைவி சங்கீதா கலந்துகொள்வார். பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சி என்றாலும் கலந்துகொள்வார். ஆனால் அட்லீ-ப்ரியாவின் சீமந்தம், வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாக்களுக்கு சங்கீதா அவர்கள் வரவில்லை.
இதனால் பல செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வந்தன. அவர் வராததற்கு முக்கிய காரணம் அவர்களின் மகன் மற்றும் மகள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களுடன் சங்கீதா அங்கு இருப்பதால் நிகழ்ச்சிகளுக்கு வர முடியவில்லை என கூறப்படுகிறது.
ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு, பிரிந்து வாழ்வதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆனால், இதுகுறித்து இதுவரை விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. மேலும், இல்லை இது பொய்யான தகவல் என்றும் விஜய் தரப்பில் இருந்து பதில் எதுவும் கூறப்படவில்லை. இதனாலேயே தொடர்ந்து பல சந்தேகங்கள் இவர்கள் தொடர்பாக எழுந்து வருகின்றன.
இந்நிலையில், நடிகர் விஜய் திருமணம் ஆகாத நடிகை ஒருவருடன் ஓவராக நெருக்கம் காட்டி வருவதாகவும், அந்த நடிகை எந்த படத்தில் நடிக்கவேண்டும் என்பதையும் விஜய் தான் முடிவு செய்து வருவதாகவும், அதுமட்டுமின்றி அந்த நடிகை வெளியில் ஷாப்பிங் செல்லவேண்டும் என்றாலும் விஜய்யிடம் கேட்டுவிட்டு தான் செல்வதாகவும் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
இதனிடையே, ‘ஷ்’ என்ற எழுத்தில் அந்த நடிகையின் பெயர் முடியும் என்றும், அவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றவர் என்றும் கூறப்பட்டு வருகிறது. விஜய்க்கும் அந்த நடிகைக்குமான உறவின் காரணமாக, இவர்களுடைய உறவினர்கள் வருதத்தில் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர். கடைசியில் என்னவாக போகிறதோ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..