ஐஸ்வர்யா ராயை கல்யாணம் பண்ணா குழந்தை அப்படி பிறக்காது – பாக். கிரிக்கெட் வீரர் சர்ச்சை பேச்சு!

Author: Shree
15 November 2023, 8:31 pm

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையும் உலக சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும் பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி என பலரும் பட்டம் பெற்றாலும் இன்றும் ‘உலக அழகி’ என சொன்னால் முதலில் நமது நியாபகத்துக்கு வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.

aishwarya rai

குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு எவ்வளவோ நல்ல பேவரைட் ஹீரோயின்ஸ் இருந்தாலும், கனவு கன்னியாக இன்னும் மனதில் நிலைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், குரு, எந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரானா அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதியா பச்சன் என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென உதாரணத்திற்காக,

அழகான அறிவான குழந்தை பிறக்கவேண்டும் என்றால் நடிகை ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்தால் நடந்துவிடாது என கொச்சைப்படுத்தும் வகையில் மிகவும் கேவலமாக பேசியிருந்தார். ஒரு பாகிஸ்தான் வீரர் இந்தியாவின் முன்னணி பிரபலத்தை இப்படி கேவலமாக பேசுவதா? என பலர் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து பாகிஸ்தாஸ் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் தனது தவறை உணர்ந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

  • shakeela talks shruthi narayanan video that is original video அது ஒரிஜினல் வீடியோதான்-ஸ்ருதி நாராயணனை குறித்து பகீர் கிளப்பிய ஷகீலா…
  • Close menu