தயாரிப்பாளரின் காலை வாரும் இளையராஜா…தேவா எவ்ளோ பெஸ்ட்…பிரபலம் பகீர்.!

Author: Selvan
12 February 2025, 4:13 pm

இளையராஜா பணத்திற்கு பின்னாடி ஓடுகிறார்

இசை ஜாம்பவானாக இருக்கும் இளையராஜா புகழை தேடாமல் பணத்தை தேடி ஓடி வருகிறார் என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: ரஜினிக்கு கண்டிப்பா அது வேணும்.. இல்லனா ரொம்ப கஷ்டம்..சர்ச்சையை கிளப்பிய பிரபல இயக்குனர்.!

தமிழ் சினிமாவின் இசை அரசனாக திகழ்ந்து வரும் இளையராஜா மீது,பலரும் பல விதமான குற்றசாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்,அதில் முக்கியமான ஒன்று தான் இசை அமைத்த பாடலை வேறு யாரவது உபயோகப்படுத்தினால்,நஷ்ட ஈடு கேட்பது, இதன் காரணமாக தற்போது இளையராஜா விவாத பொருளாக மாறி வருகிறார்.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான பாலாஜி பிரபு இளையராஜாவின் copy rights பிரச்சனையை பற்றி பேசியுள்ளார்,அதில் அவர் கூறியது,முந்தய காலத்தில் ஒரு படத்தில் வர கூடிய எல்லா உரிமையும் பட தயாரிப்பாளருக்கு மட்டுமே சொந்தம்,ஆனால் காலப்போக்கில் இசையமைப்பாளர்கள் படத்திற்கு இசை அமைக்க வரும் போது சம்பளத்துடன், COPY RIGHTS-க்கான உரிமையும் பாண்ட் போட்டு வாங்கி விடுகின்றனர்,இதனால் அவர்கள் தங்களுடைய பாடல்களை வேற யாரவது பயன்படுத்தினால் அவர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்குகிறாரகள்.

இதனால் பட தயாரிப்பாளருக்கு எந்த விதத்திலும் லாபம் கிடைப்பதில்லை, இளையராஜா,ஏ ஆர் ரகுமான்,அனிருத் போன்ற பிரபலமான இசையமைப்பாளர்கள் வந்து கேட்கும் போது தயாரிப்பாளர்களும் வேறு வழியில்லாமல் பாண்ட் போட்டு கொடுத்து விடுகின்றனர்.

அந்த வகையில் இளையராஜா சமீப காலமாக அவருடைய பாடல்களுக்கு பெரும் தொகையை வசூலித்து வருகிறார்,அவர் தன்னுடைய பாடல்கள் மூலம் புகழை தேடாமல் பணத்தை தேடி ஓடுகிறார்,இதனால் தான் அவரை பலரும் தனிப்பட்ட முறையில் திட்டி வருகின்றனர்,ஆனால் தேவா அப்படியில்லை அவர் சமீபத்தில் கூட தன்னுடைய பாடல்கள் மூலம் எனக்கு புகழ் கிடைத்தால் போதும்,பணம் தேவையில்லை என கூறியுள்ளதை குறிப்பிட்டு பேசியிருப்பார் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.

  • முதல்ல பம்முறாங்க அப்றம் சட்டம் பேசுறாங்க..வேதனையில் ஃபயர் பட இயக்குனர்.!
  • Leave a Reply