இளையராஜாவின் மகள் பவதாரிணி திடீர் மரணம் – பேரதிர்ச்சியில் திரையுலகம்!

Author: Rajesh
25 January 2024, 9:36 pm

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா , பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார்.

இதனிடையே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைக்காக இலங்கை சென்றிருந்த நிலையில் இன்று மாலை 5.20 மணி அளவில் அவர் காலமானார். அவருக்கு வயது 47 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உடல் நாளை மாலை சென்னை கொண்டுவரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அவரின் திடீர் மரணம் திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 520

    0

    0