என்கிட்ட வேலை பார்த்த பையன் அவன்…இசைஞானி போட்ட நாக் அவுட் பிளான்.!
Author: Selvan15 February 2025, 4:09 pm
தேவா,ஏ ஆர் ரகுமான் வளர்ச்சியை தடுக்க நினைத்த இளையராஜா
இசைஞானி இளையராஜா இசையில் ஜாம்பவானாக இருந்தாலும் அவருக்கு சமமாக யாரவது வளர்ந்தால் அதனை பார்த்து பொறாமைபடும் குணத்தை சார்ந்தவர் என பிரபல பத்திரிகையாளரான சபிதா ஜோசப் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: வைரல் பொண்ணுக்கு வைர நெக்லஸ்…ரசிகர்கள் வெள்ளத்தில் மோனாலிசா.!
தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் அதில்,இளையராஜா ஒரு பொறாமை பேய் பிடித்தவர்,ஆரம்ப காலகட்டத்தில் அவருக்கு சமமாக தேவாவும் வளர்ந்து கொண்டிருந்தார்,தன்னை விட தேவா பிரபலம் ஆகி விட கூடாது என்ற நினைப்போடு இருந்து கொண்டே இருந்தார்,ஒரு சமயம் தேவாவுக்கு தேசிய விருது வழங்கப்பட இருந்தது,அப்போது இளையராஜா தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி கொடுக்க விடாமல் செய்தார்,இதனை தேவா ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.
அதே மாதிரி ஏ ஆர் ரகுமான் ஆரம்பத்தில் இளையராஜாவிடம் வேலை பார்த்து கொண்டிருந்தார்,அவர் தனியாக படங்களுக்கு இசை அமைத்து ஆஸ்கார் விருதுக்கு தேர்வான போது இளையராஜா பொறாமைப்பட்டு,என்னிடம் வேலை பார்த்த பையன் அவன்,ஒரு 50 ரூபாய் சேர்த்து கொடுக்கலனு என்கிட்ட இருந்து போனான்,இப்போ ஆஸ்கார் விருது வாங்குறான் என கூறியுள்ளார்.
மேலும் சமீபத்தில் தேவா எங்கயாவது இசை நிகழ்ச்சி செய்ய திட்டமிட்டிருந்தால்,இளையராஜாவும் அடுத்த ஒரு சில நாட்களில் அங்கே இசை நிகழ்ச்சி செய்வார்,அவர் எப்போதும் தன்னுடைய சக இசை கலைஞர்கள் வளருவதை பார்த்து பொறாமை படுவார்,ஆனால் தேவா அப்படியில்லை பல முறை ஏ ஆர் ரகுமானை பாராட்டியுள்ளார்,அவர் எப்போதும் தன்னை பற்றி குறை கூறுபவர்களை கண்டுக்க மாட்டார்.
அதே மாதிரி இப்போ இருக்கின்ற சின்ன சின்ன இசையமைப்பாளர்களின் இசையில் கூட தேவா பாடுவார்,ஆனால் இளையராஜா அப்படியில்லை தான் மட்டும் தான் வளர வேண்டும்,தன்னுடைய இசை மட்டும் தான் பிரபலம் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தேவாவை நிறைய தடவை பழி வாங்க முயற்சி செய்துள்ளார் என அந்த பேட்டியில் சபிதா ஜோசப் தெரிவித்திருப்பார்.