பாலு மகேந்திரா படம்னாலே தனி ஸ்பெஷல் தான்..மீண்டும் சர்ச்சை பேச்சில் சிக்கிய இளையராஜா.!
Author: Selvan17 February 2025, 7:54 pm
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் பாலுமகேந்திரா,இவர் இயக்குனராக மட்டுமின்றி ஒளிப்பதிவாளராகவும் ஜொலித்தவர்,இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் தேதி உயிரிழந்தார்.
இதையும் படியுங்க: ஜோதிகா சொன்னத ஏத்துக்க முடியல…’ஜெய்பீம்’ பட நடிகை வருத்தம்.!
இந்த நிலையில் அவரது நினைவுநாளையொட்டி சென்னையில் பாலுமஹேந்திராவை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி நான்கு நாட்கள் நடைபெற்றது,இதில் அவருடைய குடும்பத்தை சேர்ந்த நபர்கள்,நண்பர்கள்,பல சினிமா நட்சத்திரங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா,பாலுமஹேந்திராவின் படங்களுக்கு இசையமைக்கும் போதுதான் என்னுடைய மனது இதமா இருக்கும்,அவருடைய ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடைப்பட்ட நாட்களில் நான் நூறு படங்களுக்கு இசையமைத்து முடித்திருப்பேன்,ஆனால் மீண்டும் அவருடைய படங்களுக்கு நான் இசையமைக்கும் போது மட்டும் ரொம்பவே ரசனையோடு இசையமைப்பேன்,நான் அவருடைய படங்களில் அதிக சுதந்திரம் எடுத்துக்கொண்டு வேலை பார்ப்பேன்.
அதனால் எனக்குள் ஒரு இனம் புரியாத சந்தோசம் ஒட்டிக்கொள்ளும் என அந்த நிகழ்ச்சியில் இளையராஜா தெரிவித்திருப்பார்.தற்போது இளையராஜாவின் இந்த கருத்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.