நான் ‘திமிரு’ பிடிச்சவன் தான்…இசையை எவன் சொல்லி கொடுத்தான்…சீறிய இளையராஜா..!
Author: Selvan3 February 2025, 5:09 pm
தலைக்கனம் இருந்தா என்ன தப்பு?
தன்னுடைய அசத்தலான இசையால் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர் இசைஞானி இளையராஜா.தமிழ் திரையுலகம் இவரது காலத்திற்கு பிறகு வேறொரு புது பாதையில் பயணித்தது என்று சொல்லலாம்.
கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் தன்னுடைய இசையை புகுத்தியுள்ளார்.இன்றும் சினிமாவில் இப்போது இருக்கின்ற ட்ரெண்டுக்கு ஏற்ப தன்னுடைய இசையை ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார்.என்ன தான் இசையில் கில்லாடியாக இருந்தாலும்,பலர் இவரை திமிரு பிடித்தவர்,தலைக்கனம் உள்ளவர் என சொல்லி வருகின்றனர்.எப்போதும் தன்னுடைய பெருமையை அவரே பல மேடைகளில் சொல்லி வருவது வழக்கமான ஒன்று,இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி அளித்த அவர்,பலர் இவரை பற்றி கூறும் கருத்துக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படியுங்க: ‘குட் நைட்’ படத்தில் மணிகண்டனுக்கு அடித்த லக்…பிரபல நடிகரின் தாராள மனசு.!
அதில் கேரளாவில் மதம் பிடித்த யானை ஒன்று என் பாட்டை கேட்டு தூங்கியது ,கர்ப்பமா இருந்த ஒரு பெண் என்னுடைய திருவாசகம் இசையை கேட்டதும் குழந்தை வயிற்றினுள் அசைந்தது.ஒரு சமயம் தியேட்டரில் ராசாத்தி உன்ன என்ற பாடல் ஒலித்து கொண்டிருந்த போது யானைகள் எல்லாம் வந்து அமைதியாக கேட்டு சென்றது,இதெல்லாம் நடக்கும் போது எனக்கு தலைக்கனம் இருந்தா என்ன தப்பு, எனக்கு வராம வேற யாருக்கு வரணும் என்று கூறியுள்ளார்.
மேலும் 50 வருசத்துக்கு முன்னாடி இந்த மாதிரி இசையெல்லாம் இருக்குதுனு உங்களுக்கு தெரியுமா,எந்த டீச்சர் உங்களுக்கு சொல்லி கொடுத்தது, நான் தான் இசையில் இவ்ளோ விசயங்கள் இருப்பதை கண்டு பிடிச்சேன்,அப்போ எனக்கு கர்வம்,தலைக்கனம்,திமிரு எல்லாம் இருக்க தான் செய்யும் என அந்த பேட்டியில் ரொம்ப காரசாரமாக பேசியிருப்பார்.