நீ யாருன்னே தெரியாது.. உன் படத்துக்கு மியூசிக் வேற போடணுமா கிளம்பு.. ராஜ் கிரணை ஒதுக்கிய இளையராஜா..!

Author: Vignesh
26 March 2024, 4:33 pm

கிராம பாங்கான கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்துபவர் நடிகர் ராஜ் கிரண் இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் பிறந்து தமிழ் சினிமாவின் நடிகர் , இயக்குனர் , தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார். மிகவும் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவர் குறிப்பாக கிராமத்து ரசிகர்களை குறிவைத்து நடித்து அவர்களின் தீவிர ரசிகர் ஆனார்.

raj kiran-updatenews360

தமிழில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சில திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். தான் மட்டும் வளர்ந்தால் போதும் என்ற எண்ணம் கொண்ட நடிகர்களுக்கு மாறான ராஜ்கிரண் நிறைய புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துள்ளாார். பல வெற்றி படங்களை கொடுத்து ராஜ்கிரண் தற்போது சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

raj kiran-updatenews360

ராஜ் கிரண் குறித்து ஒரு சுவாரசியமான சம்பவம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ராஜ் கிரண் தயாரித்த ஒரு படத்திற்கு இளையராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று அவர் வீட்டு வாசலில் நின்று இருக்கிறார். அப்போது, இளையராஜா நீ யாருன்னு தெரியாது உன் படத்துக்கு எல்லாம் மியூசிக் போட முடியாது என்று கடுப்புடன் கூறியிருக்கிறாராம்.

raj kiran-updatenews360

அதன் பின்னர், கவிஞர் வாலி இளையராஜாவிடம் ஒரு முறை போய் படத்தைப் பாரேன். அவன் தான் மறுபடியும் மறுபடியும் வரான்ல என்று கூறியதும் படத்தை பார்க்கிறார் இளையராஜா. பின்னர், அந்த படத்தை பார்த்து அசந்து போன இளையராஜா இந்த படத்தை நானே தயாரிக்கிறேன் என்றும், நானே வந்த விலைக்கு வாங்கிக்கிறேன் என்றும் சொல்லி இருக்கிறார். பாதி படத்தை இளையராஜாவும், மீதி பாதி படத்தை ராஜ்கிரனும் தயாரித்தார்களாம். இப்படத்தை இயக்கியது கஸ்தூரிராஜா என்று பெயர்தான் போடப்பட்டது. ஆனால், இயக்கியது ராஜ்கிரண் தானாம். அப்படத்தின் பெயர் தான் என் ராசாவின் மனசிலே.

En Rasavin Manasile
  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 300

    0

    0