மிர்ச்சி சிவாவை அசிங்கப்படுத்திய இளையராஜா.. அவரே சொன்ன விஷயம்..!
Author: Vignesh27 February 2024, 10:42 am
தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான, பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள். எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். இளையராஜா எப்படிப்பட்டவர் என யாரை கேட்டாலும்? அவரது, இசையை தவிர வேறு எதையும் கேட்காதீங்க என கூறிவிடுவார்கள். அவ்வளவு மோசமாக பிறரிடம் நடந்துக்கொள்ளவார்.

வளரும் இசைக்கலைஞர்களை அவர் வளரவே விடமாட்டார். காரணம் யார் ஒருவரும் தன்னை தாண்டி பேசப்படவே கூடாது என கெட்ட எண்ணம் கொண்டிருப்பார் என பலர் கூறி கேட்டிருப்போம். பல மேடையில் பெரிய பிரபலங்கள் என்று கூட பார்க்காமல் திட்டிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அவரின் மீதான வெறுப்பை மக்களுக்கு ஏற்படுத்திவிட்டது.

அந்த வகையில், சமீபத்தில் சித்ரா லக்ஷ்மணனின் Youtube சேனலுக்கு பேட்டி கொடுத்த மிர்ச்சி சிவா பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, பேசுகையில் இளையராஜாவிடம் அசிங்கப்பட்ட சம்பவத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார். ஒரு பேட்டியின் சமயத்தில் அவரிடம் ஆன்மீகம் ஆன்மிகம் என்று பேசுறீங்க ஆன்மீகம் என்றால் என்ன என்று கேட்டேன்.
அதற்கு அவர் உன் வேலை என்ன என்று திருப்பி கேட்க, நான் யோசித்தபோது என்ன முழிக்கிற சொல்லு என்றார். பின் தெரியல என்று சொன்னதும், உன் வேலை என்ன என்றே உனக்கு தெரியவில்லை. சரி, என் வேலை என்ன உனக்கு பதில் சொல்றது. உன் வேலை என்னை கேள்வி கேட்பது. இதிலிருந்து, என்ன புரிகிறது என்று கேட்டார். அதற்கு அமைதியாக இருந்தேன். பின் அவர் சொன்னார், அவங்க அவங்க வேலையை அவங்க செய்தாலே போதும் இந்த உலகம் சரியாகும் என்று கூறினார். இதன்பின் இனிமேல் இதை பற்றி இவரிடம் கேள்வி கேட்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் என்று மிர்ச்சி சிவா கூறியிருக்கிறார்.