கௌரவ குறைச்சல்…. ஆணவம்… மனைவியின் சாவில் கூட கங்கை அமரனை விரட்டி அடித்த இளையராஜா!

Author: Shree
21 June 2023, 7:30 pm

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள் எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். இளையராஜா எப்படிப்பட்டவர் என யாரை கேட்டாலும்? அவரது இசையை தவிர வேறு எதையும் கேட்காதீங்க என கூறிவிடுவார்கள். அவ்வளவு மோசமாக பிறரிடம் நடந்துக்கொள்ளவார்.

தன் உடன் பிறந்த தம்பி கங்கை அமரனின் வளர்ச்சிக்கு ஆரம்பத்தில் முட்டுக்கட்டை போட்டுள்ளார். யாரோ மூலமாக கிடைத்த வாய்ப்பை கூட ” அவனுக்கு இசை பத்தி என்ன தெரியும் ” அவனை போடாதீங்க என சொல்லி வாய்ப்பை பறித்தாராம்.

எல்லாம் தன்னைவிட வர்ந்திடுவானோ என்ற அச்சத்தில் தான். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், ” இளையராஜா மிகவும் ஆணவம் பிடித்தவர். என் அம்மாவுக்கு பிறகு என் அண்ணி தான் என்னை பார்த்துக்கொண்டார். அப்படியிருந்தும் அவரது சாவில் நான் கலந்துக்கொள்வதை கூட கௌரவ குறைச்சலாக பார்த்து என்னை அங்கு இருக்கவிடாமல் விரட்டினார் என மிகவும் வருத்தத்தோடு கூறியுள்ளார். இதே போல் என் மனைவி மணிமேகலையின் மரணத்திற்கு கூட அவர் வரவில்லை என்றார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!