எனக்கு தெரியுது நான் மோசமா நடந்துக்குறேன்… டார்ச்சர் பண்றேன்னு – சர்ச்சைகளுக்கு இளையராஜா வேதனை!

Author: Shree
22 May 2023, 12:01 pm

எனக்கு தெரியுது நான் மோசமா நடந்துக்குறேன்… டார்ச்சர் பண்றேன்னு – சர்ச்சைகளுக்கு இளையராஜா விளக்கம்!

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள் எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். அத்திமட்டுமல்லாமல் தன்னை தவிர யாரும் திறமை இருப்பவர்கள் கூட வளரக்கூடாது என கீழ்த்தரமான எண்ணம் கொண்ட மட்டமான மனிதர் இளையராஜா என பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

அந்தவகையில் அண்மையில் மறைந்த நடிகர் மனோபாலாவுக்கு அஞ்சலி செய்தி வெளியிட்ட அவர் தற்பெருமை பேசி விமர்சனத்திற்கு உள்ளானார். மேலும் இளையராஜா தனது நெருங்கிய நண்பரான மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் உயிர் போகும் தருவாயில் கூட அவரை சென்று பார்க்கவில்லை. மலேசியா வாசுதேவன் அந்த ஏக்கத்தில் உயிர்விட்டார். அதோடு, இளையராஜா தன் உடன் பிறந்த தம்பி கங்கை அமரன் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன அவரது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு தடுத்தார்.

அதுமட்டும் அல்லாமல், இளையராஜா ஏஆர் ரஹ்மானின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டு அவர் எங்க வளர்ந்திடுவாரோ என்ற ஒரு வித பயத்தில் அவரது வளர்ச்சியை பலகோணங்களில் தடுத்து நிறுத்தியிருக்கிறார். மேலும் பல மேடைகளில் சக திரைத்துறை பிரபலங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி அவமதித்திருக்கிறார்.

இந்நிலையில் தன் சர்ச்சைகள் குறித்து விளக்கம் அளித்துள்ள இளையராஜா, ‘எனக்கு தெரிகிறது உங்களை டார்ச்சர் செய்கிறேன், உங்களை கோபப்படுத்துகிறேன், எல்லாரையும் ஒரு மாதிரியாக நடத்துகிறேன் என்பதெல்லாம் எனக்கு தெரிகிறது. ஆனாலும் அதை நிறுத்த முடியவில்லை என்று பேசி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1000

    4

    6