தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் கமலஹாசன் இவர் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப் பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இவர் சினிமாவில் வித்தியாசமான கோணத்தில் அணுகி புது புது படைப்புகளையும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி மக்களை வியக்க வைத்துக் கொண்டே இருக்கிறார் .
இப்படி இருக்கும் நிலையில் கமலின் மெகா ஹிட் படத்தை இயக்க இயக்குனர் கே பாலசந்தர் மறுத்துவிட்டாராம் . ஆனால் அந்த படத்தை பார்த்துவிட்டு இளையராஜா சபதம் எடுத்திருக்கிறார். இது போன்ற ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது 1989 ஆம் ஆண்டு சங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய திரைப்படம் தான் அபூர்வ சகோதரர்கள்.
இந்த படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அதில் குள்ளமாக நடித்து குழந்தைகள் முதல் பெரியவர் வரை கவர்ந்தார். இன்று வரை அந்த கதாபாத்திரம் பலருக்கும் விருப்பமான கதாபாத்திரமாக இருந்து வருகிறது. இந்த படம் வெளியாகி வசூல் பட்டையை கிளப்பியது .
இன்று வரை கமல் அந்த கதாபாத்திரத்தை எப்படி செய்தார் என்று பலரும் வியந்து வருகிறார்கள். ஆனால் இந்தபடம் உருவாகி இருக்கும் சமயத்தில் பலரும் இந்த படத்தை கேலி செய்திருக்கிறார்கள். இந்த படத்தை தொடங்கிய கமல் பாலச்சந்திரிடம் இயக்க சொல்லி கேட்டிருக்கிறார் . ஆனால் பாலச்சந்தர் கதையை கேட்டு பயந்து இந்த படம் ஓடாது என்று நினைத்து மறுத்துவிட்டாராம்.
அதற்கு அடுத்ததாக சங்கீதம் சீனிவாசராவ் இடம் சென்று கதையை சொல்லி இயக்கச் சொன்னாராம். அதன் பின் தான் படம் வெளிவந்தது. படம் ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே அவரும் ஒதுங்க பின்னர் பஞ்சு அருணாச்சலம் கதை எழுதி கமலிடம் சேர்ந்து இருவரும் எப்படியோ படத்தை முடித்து விட்டனர்.
படம் வருவதற்கு முன் இந்த படத்தை பார்த்த இளையராஜா இந்த படம் ஓட வில்லை என்றால் நான் இனிமேல் இசையமைப்பதையே நிறுத்தி விடுகிறேன் என்று நம்பிக்கையோடு பணியாற்றினார் . அந்த படமும் வெளியாகி மிகப் பெரிய ஹிட் அடித்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.