அவருக்கு அடிமையாக இருக்கனும் ஆனால், அவரை விட பெருசா வளர கூடாது – இளையராஜா குறித்து கங்கையமரன்!

Author: Shree
17 April 2023, 12:56 pm

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள் எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். இளையராஜா எப்படிப்பட்டவர் என யாரை கேட்டாலும்? அவரது இசையை தவிர வேறு எதையும் கேட்காதீங்க என கூறிவிடுவார்கள். அவ்வளவு மோசமாக பிறரிடம் நடந்துக்கொள்ளவார்.

இந்நிலையில் தற்போது இளையராஜாவின் தம்பி கங்கை அமரனின் வளர்ச்சிக்கு ஆரம்பத்தில் முட்டுக்கட்டை போட்டதை குறித்து அவர் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது, “என்னுடைய நண்பர் மலேசியா வாசுதேவன் கதையில் ஒரு படம் தயாராக இருந்தது. அந்த படத்தில் அவர்தான் கதாநாயகன். இசை யாரை போடலாம் என்று யோசித்து கொண்டிருந்தபோது இளையராஜா என்று பேசிட்டு கொண்டிருந்தார்கள்.

ஆனால், மலேசியா வாசுதேவன் இளையராஜா வேண்டாம். அவர் மிகவும் காஸ்ட்லி. அவர் போடும் டியூன் எல்லாம் கங்கை அமரன் தான் கொடுக்கிறார். அதனால் அவரைப் போடுவோம் என சொல்லி என்னை பிக்ஸ் பண்ணிட்டு என்னிடம் வந்து சொன்னார்கள். அப்போது நான் அண்ணன் இளையராஜாவிடம் வேலை செய்துக்கொண்டிருந்தேன்.

எனக்கு மியூசிக் பத்தி ஒன்னுமே தெரியாது என்று சொல்லியும் அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் வா என்று சொல்லி என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கே போயிட்டு பேசிட்டு அட்வான்ஸ் எல்லாம் வாங்கிட்டேன். இந்த விஷயம் மறுநாள் செய்தித்தாளில் எல்லாம் வந்துவிட்டது. இது என் அண்ணன் இளையராஜா பார்த்துவிட்டார். உடனே என்னை அழைத்து என்னடா இசையமைக்க போறியாமே? என்று கேட்டார். ஆமாம், அண்ணா இவங்கதான் கூட்டிட்டு போய் ஓகே பண்ணாங்க என பயந்தபடி கூறினேன்.

அவர் கோபத்துடன் உனக்கு ம்யூசிக் பற்றி என்னடா தெரியும்? கிட்டார் தூக்கிக்கிட்டு ஓடு என்று விரட்டி அடித்தார். நானும் உடனே அங்கிருந்து கிளம்பி விட்டேன். எந்த வாக்குவாதம் இளையராஜாவின் குரு ஜி கே வெங்கடேசனுக்கு தெரியவர, நீ என்கிட்ட வேலை செஞ்சிட்டு தனியா மியூசிக் பண்ண போனப்ப உன்னை என் குரூப்பை விட்டு விலக்கினேனா? இல்லைல அந்த படத்திற்கு வேறு யாராவது மியூசிக் பண்ண போறாங்க. அதற்கு அவன் பண்ணா என்ன என்று கேட்டவுடன் தான் அண்ணா ஒப்புக்கொண்டார். அதன்பிறகு அந்த படத்திற்கு நான் இசையமைத்தேன். படமும் நன்றாக ஓடி வெற்றி அடைந்தது என்று கூறினார். சொந்த தம்பியின் வளர்ச்சியையே இப்படி கெடுத்துள்ளாரா? இளையராஜா என ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 1067

    17

    12