அவர் கூட பாட போய்ட்டு இங்க எதுக்கு வர? “சின்ன சின்ன ஆசை” பாடகியை பீல்டவுட் செய்த இளையராஜா!
Author: Shree24 June 2023, 8:56 pm
தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.
இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள் எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். இளையராஜா எப்படிப்பட்டவர் என யாரை கேட்டாலும்? அவரது இசையை தவிர வேறு எதையும் கேட்காதீங்க என கூறிவிடுவார்கள். அவ்வளவு மோசமாக பிறரிடம் நடந்துக்கொள்ளவார்.
வளரும் இசைக்கலைஞர்களை அவர் வளரவே விடமாட்டார். காரணம் யார் ஒருவரும் தன்னை தாண்டி பேசப்படவே கூடாது என கெட்ட எண்ணம் கொண்டிருப்பார். அவ்வளவு ஏன் பெற்ற மகன் கார்த்திக் ராஜா இசைமைத்த பாடலில் கூட அவருக்கு கிரடிட்ஸ் கொடுக்காமல் தன் பெயரை போட்டுக்கொண்ட சுயநலவாதி இளையராஜா.
அப்படித்தானே 1992ம் ஆண்டு வெளியான மீரா படத்தில் பாடகி மின்மினியை தன் இசையில் அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் பாடகி மின்மினிக்கு ஏஆர் ரஹ்மான் இசையில் ரோஜா படத்தில் இடம் பெற்ற சின்ன சின்ன ஆசை பாடல் தான் பட்டிதொட்டி எங்கும் பரவி பிரபலமான பாடகியாக மாற்றியது. தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் கிடைத்துக்கொண்டிருந்த சமயத்தில் நோய்வாய்ப்பட்டு சில ஆண்டுகள் இடைவெளிவிட்டு பின்னர் மீண்டும் பட வந்தார்.
இது குறித்து சமீபத்திய இசை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாடகி மின்மினி, என்னை அறிமுகம் செய்துவைத்த இளையராஜா அவ்வப்போது ஒரு சில பாடல்களில் பாட வாய்ப்புகள் கொடுத்து வந்தார். நான் எப்போதும் ஏஆர் ரஹ்மான் இசையில் சின்ன சின்ன ஆசை பாடல் பாடினேனோ அதிலிருந்து எனக்கு அவர் வாய்ப்புகள் கொடுக்க மறுத்துவிட்டார் என கூறி இளையராஜாவின் உண்மையாக முகத்தை தெரிவுபடுத்தியுள்ளார்.