திருக்கடையூரில் குவிந்த இளையராஜா குடும்பம்… இயக்குநர் பாரதிராஜா ஆகியோரும் குவிந்ததால் பரபரப்பு..!!!

Author: Babu Lakshmanan
31 May 2022, 8:48 am

மயிலாடுதுறை : இசைஞானி இளையராஜா நாளை தனது பிறந்த நாளை கொணடாடப்பட உள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் திருக்கடையூரில் குவிந்துள்ளனர்.

இசையால் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான இசைஞானி இளையராஜா நாளை மறுநாள் தனது 80வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதனை அவரது ரசிகர்களும் உற்சாகமாகக் கொண்டாட உள்ளனர்.

இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த திருக்கடையூரில் உள்ள அமிர்த கடேஸ்வரர் கோயிலில், 60 முதல் 100 வயது உடையவர்கள், வயதின் அடிப்படையில் சிறப்பு அபிஷேகப் பூஜைகளை செய்து, அம்பாளை தரிசித்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அந்த வகையில், 80 வயதை எட்டும் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா சதாபிஷேகம் செய்து கொள்வதற்காக அமிர்த கடேஸ்வரர் கோவிலுக்கு வருகை புரிந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்கள் இசைக்க வாசிக்க, கோவில் கொடிமரத்தின் அருகே இளையராஜா கோ பூஜை, மற்றும் கஜ பூஜை செய்தார்.

தொடர்ந்து, இளையராஜாவுக்கு சதாபிஷேக முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, நாளை காலை 6 மணி முதல் 8 மணிக்குள் இரண்டாம் கால பூஜைகள் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1539

    5

    2