நடுரோட்டில் காத்திருந்த நடிகர்..- இந்த வேலையெல்லாம் வச்சுக்காத வார்னிங் கொடுத்த இளையராஜா..!
Author: Vignesh26 June 2023, 4:00 pm
தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவானாகவும், இசைஞானியாகவும் திகழ்ந்து வருபவர் இளையராஜா. கடைசியாக இவர் விடுதலை படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். பல்லாயிரக்கணக்கான பாடல்களை கொடுத்த இளையராஜா புகழின் உச்சிக்கே சென்றாலும் சில வெறுப்புகளையும், சில சங்கடங்களையும் சந்தித்திருக்கிறார்.

ஒரு காலகட்டத்தில் இளையராஜாவின் கால்ஷீட்டுக்காக இயக்குனர்கள் பலர் வரிசையில் நிற்கும் நிலை இருந்துள்ளது, ஏன் இப்போதும் அது நடந்து தான் வருகிறது. அப்படித்தான் மனோபாலாவிற்கு இரங்கல் தெரிவித்த இளையராஜா மனோபாலா தனக்காக ரோட்டில் காத்திருந்தவர்களில் ஒருவர் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பலர் கடுமையாக விமர்சித்து வந்தனர். ஆனால் அப்போது மனோபாலா ரோட்டில் இளையராஜாவின் கண்படும்படி நின்று கொண்டிருந்ததாகவும், பாரதிராஜாவிடம் பணியாற்றும் நபர்களிடம் மரியாதை கொண்டவராக இளையராஜா திகழ்ந்து வந்ததாகவும், தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக பாரதிராஜாவிடம் பணியாற்றிய மனோபாலாவை இளையராஜா அங்கு நிற்பதை பார்த்து உடனே அவரை அழைத்து இருக்கிறார். அப்போது மனோபாலாவிடம் இளையராஜா நீங்களும் மற்றவர்களும் ஒன்றா எதற்காக இப்படி என் கண் படும்படி நிற்கிறீர்கள் இனிமேல் இப்படி செய்யாதீர்கள் என்று வார்னிங்கும் கொடுத்து அனுப்பியிருக்கிறார். இந்த சம்பவத்தை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.