தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்ற பங்கு இளையராஜாவுக்கு உண்டு. அவர் அமைத்த பாடல்கள் உலகத்தையே ரீங்காரமிடச் செய்தது என்று கூறினால் அது மிகையல்ல.
அவருடைய இசையில் பாடத் தவம் கிடந்த எத்தனேயோ பாடகர்கள் உள்ளனர். அவர் அறிமுகம் செய்த எத்தனையோ பாடகர்களும் உள்ளனர்.
அந்த வகையில் மலையாளத்தில நடிகர், பாடகராக இருந்த கிருஷ்ணசந்தரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இளமையான குரல் வளமுடைய கிருஷ்ணசந்தர் பாடிய தமிழ் பாடல்களும் இன்றளவும், இசைக்கு மயங்கியவர்களை மயக்க செய்யும்.
தனது வசீகர குரலால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். அவர் பாடிய ஏதோ மோகம், பூ வாடை காற்று, தென்றல் வந்து போன்ற பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது.
ஆனால், ஒரு சில காரணங்களால் தமிழ் சினிமாவில் பாடுவதை தவிர்த்து விட்டார். அதுக்கு இளையராஜாவும் ஒரு காரணம், அவர் தான் அறிமுகப்படுத்தி வைத்தார். ஆனால் இதுவரை கிருஷ்ணசந்தரை நன்றாக பாடியதாக பாராட்டியதே கிடையாது.
அதே சமயம் கிருஷ்ணசந்தர் நடிகராகவும் தனது பணியை தொடர்ந்துள்ளார். ஒரு நாள் பாடல் பதிவின் போது, கிருஷ்ணசந்தர் குரல் வளம் இல்லாமல் போய்விட்டது. உடனே அவர் இரண்டு கப்பல்களையும் கால் வைத்தால் இப்படித்தான் இருக்கும், ஒரு கப்பலில் மட்டும் பயணம் செய்ய வேண்டும் என கண்டிப்போடு கூறிவிட்டார்.
அதனால் தமிழில் பாடுவதை தவிர்த்த அவர், தொடர்ந்து மலையாள படங்களில் நடிகராகவும், பாடகராகவும் தொடர்ந்தார்.
வெகுநாள் கழித்து பசும்பொன் படத்தில் தாமரைப் பூவுக்கும் பாடலை பாடி மீண்டும் தமிழ் பாடல்களை பாடினார். இந்த தகவலை அவரே தமிழ் தொலைக்காட்சியில் பாடகர் மனோ நடத்திய நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.