என் இசையை கேட்டு ச்சீன்னு காரி துப்பினார்… மனம் குமுறிய இளையராஜா மகன்!
Author: Rajesh8 February 2024, 2:57 pm
தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்குவதில் அவர் ஞானி.
இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள் எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். அத்திமட்டுமல்லாமல் தன்னை தவிர யாரும் திறமை இருப்பவர்கள் கூட வளரக்கூடாது என கீழ்த்தரமான எண்ணம் கொண்ட மட்டமான மனிதர் இளையராஜா என பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா பேட்டி ஒன்றில் தனது அப்பா இளையராஜா குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். ” வீட்டில் அப்பா எங்களிடம் பேசுவதையே நாங்கள் பெரிய விஷயமாகவும், பெருமையாகவும் நினைப்போம். நான் அம்மா பிள்ளை தான். நான் எதாவது பாடலை கம்போஸ் பண்ணி அப்பாவிடம் போட்டு காட்டினால் ச்சீ… த்தூ என்ன இது இப்படி இருக்கு? என காரி துப்புவார். அதெல்லாம் நினைச்சாலே மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கும். அப்பா நம்மள வழிநடத்தவில்லையே என்ற ஏக்கம் மனதில் இருக்கும். ஆனாலும் நாங்கள் புன்னகையோடு கடந்துச்செல்வோம் என மனவேதனையுடன் கூறினார்.