உருகி உருகி காதலித்த இளையராஜா – உதறித்தள்ளிய பிரபலம் – பிளாஷ்பேக் LOVE ஸ்டோரி!

Author: Shree
17 April 2023, 8:14 pm

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜாவுக்கே ஒரு காதல் தோல்வி இருந்ததென்றால் நம்ப முடிகிறதா? நம்மில் பலர் அவரது பாடலை கேட்டு காதலிப்பது தான் வழக்கமான ஒன்று ஆனால், அந்த இசைஞானியையே ஒரு பெண் உதறி தள்ளியுள்ளார்.

ஆம், இளையராஜா சினிமாவிற்கு வந்த புதிதில் வீணை கலைஞர் காயத்ரியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளாராம். இந்த காதல் நாளுக்கு நாள் தீவிரமடைய ஒரு நாள் மனதில் தைரியத்தை வரவைத்துக்கொண்டு அந்த பெண்ணிடம் தன் காதலை கூறியிருக்கிறார். ஆனால் காயத்ரி இளையராஜாவின் காதலை ஏற்க மறுத்துவிட்டாராம். இதையடுத்து இளையராஜா ஜீவா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு பிறந்த பிள்ளைகள் தான், கார்த்திகேயன், யுவன் ஷங்கர், பவதாரிணி. இளையராஜாவின் இந்த பிளாஷ்பேக் LOVE ஸ்டோரி கேட்டு ரசிகர்களே அப்படியா? என வியந்துவிட்டனர்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 756

    1

    0