ஆணின் கையில் அது இருந்தால் உடலுறவு சிறப்பா இருக்கும் – கூச்சமின்றி கூறிய இலியானா!

Author: Rajesh
23 January 2024, 1:01 pm

தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இலியானா டிகுரூஸ். தமிழில் சில படங்களில் அவர் நடித்திருந்தாலும், நடிகர் விஜய் நடித்த நண்பன் படம் அவருக்கு நல்லாவே கைகொடுத்தது. குறிப்பாக, அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘இருக்கானா இடுப்பிருக்கானா’ என்ற பாட்டுக்கு அவர் ஆடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. முன்னதாக தமிழில் ‘கேடி’ படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.

ileana d'cruz -updatenews360

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் அன்ரூ என்பவரை காதலித்து அவருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருந்த நேரத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்கள். இதையடுத்து, உடல் எடை கூடிய அவரது புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், அடிக்கடி பிகினி ஆடையில் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார்.

இலியானா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தாலும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எப்போதும் வாய் திறக்காமல் இருந்து வருகிறார். இதனிடையே செபாஸ்டியன் லாரன்ட் மைக்கேல் என்பவருடன் ரகசியமாக டேட்டிங் செய்துவந்தார். அவ்வப்போது இந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் கசிந்து காதல் கிசுகிசுக்கப்பட்டது. அந்த நபர் பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃபின் சகோதரர்.

காதலை வெளிப்படுத்துவதற்கு முன்னரே இலியானா தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தார். இதனால் இலியானாவின் கர்ப்பத்திற்கு காரணம் யார்? என்ற கேள்வி எழுந்து பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பின்னர் இலியானாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் கணவன் மனைவியின் இல்லற வாழ்க்கை குறித்து பேசியுள்ள இலியானா…. அதாவது தனது மனைவியின் நம்பிக்கையை பெற்று தன் கைக்குள் வைத்திருக்கும் ஒரு ஆண், உடல் மெலிந்திருந்தாலும் கூட பேராண்மை கொண்டவனாவாக வீரனாக பார்க்கப்படுவான். ஒரு ஆணுக்கு பெண் மீதான நம்பிக்கை கையில் இருந்தால், உடலுறவு சிறப்பாக இருக்கும். அதுவே இருவரது இல்லற வாழ்க்கை சிறப்பிக்க வழிவகுக்கும் என்றார் இலியானா.

  • Serial Actor Who Got Divorce from his wife விவாகரத்து கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஷாக் கொடுத்த சீரியல் நடிகர்!
  • Views: - 376

    0

    0