காதை இனிமையாக்கும் ராஜாவின் குரல்… விடுதலை 2 படத்தின் பாடல் வெளியீடு…!
Author: Selvan17 November 2024, 3:16 pm
விடுதலை-2 பாடல் வெளியீடு
கடந்த 2023ம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில்வெளிவந்த திரைப்படம் விடுதலை.
இதில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி, சேத்தன், பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன் என பலர் நடித்திருந்தனர். இசைஞானி இளையராஜா இசையில் படத்தின் பாடலும் மெகா ஹிட்டானது.
இப்படம் இரண்டு பாகமாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.அதனைத்தொடர்ந்து, இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்றது.
இதையும் படியுங்க: கங்குவா பட விமர்சனம் திட்டமிட்ட சதி ..ஆவேசம் ஆன ஜோதிகா..!
இதில் மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப், கிஷோர், கென் கருணாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர் . விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பாப்புடன் இருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் இளையராஜாவின் இசையில் அவருடைய காந்த குரலில் உருவான தினம் தினம் எனும் பாடல் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தது.
இசையில் இவருக்கு நிகர் யாரும் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளார் இளையராஜா.