எப்பவும் நான் தா ராஜா…… என்ன அடிக்க யாராலும் முடியாது..வைரலாகும் இளையராஜா ட்வீட்!
Author: Selvan17 November 2024, 12:39 pm
புகழின் உச்சத்தில் இளையராஜா
தமிழ் சினிமாவில் மாபெரும் இசை ஜாம்பவனாக திகள்பவர் இசையானி இளையராஜா.அன்னக்கிளி படத்தில் ஆரம்பித்து 1000 க்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.ஏகப்பட்ட இசைக் கச்சேரிகளும் நடத்தியுள்ளார்.
81 வயதிலும் இப்போ இருக்குற ட்ரெண்டுக்கு ஏற்ப புது புது வித்தைகளை தன்னுடைய இசையில் புகுத்தி வருகிறார்.

சமீபத்தில் கொஞ்ச காலமாக தன்னுடைய இசைக்கு காப்புரிமை நோட்டீஸ் கேட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார்.மஞ்சுமோல் பாய்ஸ் படத்தில் வெளியான கண்மணி பாடலுக்கு காப்புரிமை நோட்டீஸ் கேட்டார்.தற்போது சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தில் நீ பொட்டு வச்ச பாடலுக்கு படக்குழு உரிய காப்புரிமை வாங்கியதால் அதற்கு இளையராஜா தக்க மரியாதையை வழங்கினார்.
இதையும் படியுங்க: நயன்தாரா-விக்கியின் தில்லு முல்லு…25 கோடியை பறிகொடுத்த தனுஷ்..!
மக்களும் இளையராஜாவின் பழைய பாடல்கள் படத்தில் வருவதை கொண்டாடி வருகின்றனர்.அடிக்கடி பல மேடைகளில் மற்றும் சமூக வலைத்தளங்களில் தன்னைத்தானே பெருமைப்படுத்திக்கொள்வார்.
தற்பெருமையில் இளையராஜா
அந்த வகையில் தற்போது தன்னுக்கு தானே தம்பட்டம் அடித்து கொள்வது நல்லாதான் இருக்கிறது என குறிப்பிட்டு ,100 ஆண்டு இந்திய சினிமாவில் சொந்தமாக “இசையை எழுத்து வடிவில் எழுதக்கூடிய ஒரே இசைக்கலைஞன் இசைஞானி இளையராஜா” மட்டும்தான் என்பது இன்றுவரை பலருக்கும் தெரியாது என தன்னுடைய பெருமையை தானே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
எவ்வளவு உயரம் போனாலும் கூடவே அவருடைய தலைக்கனமும் உயர்ந்து கொண்டே போகிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.