பெருமிதம் கொள்கிறேன்… கணவருடன் “நாப்கின்” தொழில் ஆரம்பித்த நயன்தாரா!

மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.

தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே 9 ஸ்கின் என்ற சருமம் சார்ந்த products தொழில் ஒன்றை ஆரம்பித்தார். அதன் விளம்பர புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில் தற்போது மீண்டும் நயன்தாரா விஜயதசமி திருநாளில் புதிய தொழில் ஒன்றை துவங்கியிருக்கிறார். ஆம், FEMI9 தனது பிராண்ட் நேமில் நேப்கின் தயாரிக்கும் தொழிலை தனது கணவருடன் சேர்ந்து சொந்தமாக துவங்கியுள்ளார். இது குறித்த பதிவில், பெருமிதம் கொள்கிறேன்… இந்த விஜயதசமி திருநாளில் FEMI9 எனும் புதிய பயணத்தை தொடங்குவதில் பெருமை கொள்கிறேன்!

தனிமனித சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த Femi9 ஒரு பிராண்ட் மட்டுமல்ல. இது ஒவ்வொரு பெண்ணின் வலிமை மற்றும் அழகுக்கான ஒரு அடையாளமாகும். பெண்களுக்கு அதிகாரமளிக்கும் இந்த முயற்சியைக் கொண்டாட என்னுடன் இணையுங்கள்! ஒருவரையொருவர் ஆதரிப்போம், இணைந்து உயர்வோம் என கூறி கணவருடன் இதற்கு விளம்பரம் செய்த புகைப்படத்தையும் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். நயன்தாராவின் இந்த அடுத்தகட்ட வளர்ச்சிக்கு பலர் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Ramya Shree

Recent Posts

தர்ஷன் கைது: எனக்கு ரொம்ப சந்தோஷம், ஆனா?- வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சனம்!

பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…

10 minutes ago

மருமகள் மீது தீராத மோகம்… தவறாக நடக்க முயன்ற மாமனார் : மகன் எடுத்த விபரீத முடிவு!

தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம்…

24 minutes ago

ED நுழைந்து எல்லா தகவலையும் எடுத்திட்டு போயிட்டாங்க.. இனி திமுக கதை க்ளோஸ் : அதிமுக பிரமுகர் பேச்சு!

திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…

2 hours ago

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

17 hours ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

17 hours ago

This website uses cookies.