அவர் மீது இன்னும் காதல் இருக்கு… விவாகரத்து குறித்து சுச்சி லீக்ஸ் சுசித்ராவின் முன்னாள் கணவர் ஏக்கம்!

Author: Shree
12 November 2023, 11:11 am

பிரபல பாடகி, ஆர்ஜே, தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகை என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் பரவியது.

சமீபத்தில் தனக்கு மனநிலை சரியில்லை என கூறி பயில்வான் ரங்கநான் வெளியிட்ட வீடியோவை பார்த்து கடுப்பான சுசித்ரா, தன்னைப் பற்றி பேச சொன்னது தனுஷ் தானே என்றும் தனுஷ் எவ்வளவு பணம் கொடுத்தார் என்று கேட்டும் விளாசினார். மேலும் தன்னிடம் சில வீடியோக்கள் இருக்கிறது, அதைப்பற்றியும் பேசுங்கள் என்றும் கூறி திணற வைத்தார். அவர் பேசிய ஆடியோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது.

இந்த விவகாரத்தில் தனுஷின் பெயர் அடிப்பட்டது, அவரது ரசிகர்களுக்கு பெரும் சினிமா துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தனுஷ் இதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகிறார். தனுஷின் இந்த அமைதிக்கு காரணம் அவர் குறித்த ஏதோ ஒரு ஆதாரம் சுச்சியிடம் இருப்பதுதான் என கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகைகளுடன் தனுஷ் நெருக்கமாக இருந்ததால்தான் ஐஸ்வர்யாவுக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தலையிட்டு தனுஷை எச்சரித்ததாகவும் கூறப்பட்டது. இதனால் விவாகரத்து வரை சென்று இருவரும் பிரிந்துவிட்டனர்.

இந்த சுசி லீக்ஸ் விவகாரத்தினால் சுசித்ராவின் கணவர் கார்த்திக் அவரை விவாகரத்து செய்து புரிந்துவிட்டு வேறொரு பெண்ணை மறுமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் சுசித்ராவை விவாகரத்து செய்தது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் கார்த்திக், ” நான் சுசித்ராவை பிரிந்தாலும் அவர் மீது எப்போதுமே எனக்கு அன்பு உண்டு. அவர் மிகவும் அழகானவர். அவர் மிகவும் கஷ்டப்பட்டு, தன்னுடைய சினிமா வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு வந்தார்.

அதனால் எனக்கு அவர் மீது எப்போதும் அக்கறை இருக்கிறது. அவரது முயற்சிகளின் மீது எனக்கு மதிப்பு இருக்கிறது. எனக்கும் அவருக்கும் இடையே நடந்த மணமுறிவு நிச்சயமாக கஷ்டமாகத்தான் இருந்தது. இருப்பினும் அவர் மீது உள்ள அன்பு, அக்கறையெல்லாம் இன்னும் போகவில்லை.சுசி லீக்ஸ் விவகாரம் குறித்து நான் அவரிடம் சொன்னது ஒரே ஒரு விஷயம் தான்.

அதாவது, அந்த பிரச்சனையால் எப்போதுமே உங்கள் வாழ்க்கையில் இக்கட்டான ஒரு சூழ்நிலை வந்து கொண்டே தான் இருக்கும். அதனுடன் ஒரு தைரியத்துடன் போராட வேண்டியது உங்களுடைய பொறுப்பு என்பதை தெரிவித்துவிட்டு அவரை பிரிந்தேன். அதை எப்போதும் மறக்க முடியாது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 329

    0

    0