குடும்பத்தோடு விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி…உயிர் தப்பியது எப்படி…வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

Author: Selvan
28 January 2025, 9:06 pm

திடீர் விபத்து..கதிகலங்கிய ரசிகர்கள்

சினிமாவில் நிறைய பேர் பெரிய ஆளாக வர வேண்டும் என சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.ஆனால் ஒரு சிலரால் மட்டுமே அந்த கனவை அடைய முடிகிறது.

இதையும் படியுங்க: ஆவலுடன் ஓடி சென்ற வெங்கட் பிரபு…ஏமாற்றத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்…கடைசியில் இப்படி ஒரு முடிவா..!

அந்த வகையில் தனது சொந்த ஊரான நெல்லையில் இருந்து தனது சினிமா கனவை நோக்கி பயணம் செய்தவர் இமான் அண்ணாச்சி,ஆரம்பத்தில் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காதல் கிடைச்ச வேலைகளையெல்லாம் செய்து தன்னுடைய வாழ்க்கையை நகர்த்தியுள்ளார்.அதன் பின்பு தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி பின்பு கடின உழைப்பால் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தவர் இமான் அண்ணாச்சி.

இவர் பல படங்களில் காமெடியனாக நடித்து மக்களை மகிழ்வித்து வருகிறார்.இந்த நிலையில் தன்னுடைய சொந்த ஊரான நெல்லைக்கு குடும்பத்துடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளார்.

சென்னை-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது குறுக்கே ஒரு மாடு வந்துள்ளது,இதனால் மாடு மீது இவர்கள் சென்ற கார் மோதி விபத்தில் சிக்கியுள்ளது.ஆனால் அதிர்ஷ்டவசமாக இமான் அண்ணாச்சி மற்றும் அவருடைய குடும்பத்திற்கு பெரிய பாதிப்பு இன்றி உயிர் தப்பியுள்ளனர்.

இந்த தகவல் செய்தி தாள்களில் வெளியாகின,அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மாடுகளால் நடக்கும் விபத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக விழிப்புணர்வு பதிவை பகிர்ந்துள்ளார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…