சிம்புவுக்கு வாயில சனி.. அவங்க கூட Breakup இப்படித்தான் ஆச்சு..!
Author: Vignesh8 August 2023, 10:30 am
தமிழ் சினிமாவில் டி ராஜேந்தர் இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும் திகழ்ந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது மகன் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் STR என்று அழைக்கப்பட்டு புகழப்பட்டும் வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்பு நடிகை நயன்தாராவை ரகசியமாக காதலித்து நெருக்கமாக இருந்தார். அவர்களின் லிப்லாக் புகைப்படங்கள் கூட இணையத்தில் லீக்கானது. அதையடுத்து அவரை பிரிந்து நட்பாக பழகி வருகிறார். இதனிடையே நடிகை ஹன்சிகாவை காதலித்து பிரேக்கப் செய்துவிட்டார்.
தற்போது 40 வயதாகும் சிம்பு இன்னும் திருமணம் செய்யாமலே இருந்து வருகிறார். இவருக்கு சீக்கிரமாக திருமணம் செய்து பார்க்கவேண்டும் அவரது அப்பா டீ ராஜேந்தர் ஆசைப்பட்டு பெண் தேடி வந்த செய்திகள் கூட இணையத்தில் வெளியாகி பரப்பரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் சிம்புவின் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. ஹன்சிகாவுடன் காதலில் விழுந்த சமயத்தில் திருமணம் வரை சென்ற இவர்களது உறவு திடீரென ஒரு நாள் பிரேக்கப் ஆனது. இதற்கு காரணம் சிம்புவின் ஓவர் துடுக்கு வாய் தானாம். அவரின் நடத்தை சிறு பிள்ளை போலவே இருக்க அட போங்கபா என சிம்புவை விட்டு ஹன்சிகா இருந்ததாக பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.