இமான் மனைவியின் போட்டோவை பார்த்து அசந்து போன சிவகார்த்திகேயன் – வைரலாகும் கமெண்ட்..!

Author: Vignesh
26 October 2023, 6:33 pm

கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமானின் சண்டை தான் சினிமாவின் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. பிரபல இசையமைப்பாளர் டி. இமான் சமீபத்திய பேட்டி ஒன்றில், ” சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றிவிட்டதாக. அவர் மிகப்பெரிய துரோகி என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “சிவகார்த்திகேயன் கடின உழைப்பாளி என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. மனம் கொத்தி பறவை படத்தில் ஆரம்பித்த அவருடனான பயணம் பல படங்களில் தொடர்ந்தது. ஆனால் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்.

அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று தடாலடியாக கூறினார். இவ்வளவு வெறுப்புக்கு என்ன காரணம் என கேட்டதற்கு… சம்பவத்தை வெளியில் சொல்ல முடியாது. பார்ப்பதற்கு தான் அவர் நல்ல மனிதர் என்னிடம் அன்பாக பேசிக்கொண்டே எனக்கு எதிரான வேலைகள் செய்துவந்ததை நான் தாமதமாக தான் புரிந்துக்கொண்டேன் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தான் இமான் மோனிகா பிரியவே காரணம் என்று நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டனர். இந்நிலையில், இமான் விவகாரத்திற்கு முன்பு முதல் மனைவியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்திற்கு சிவகார்த்திகேயன் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி என்று கமெண்ட் செய்துள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 634

    3

    0