தமிழ் சினிமாவின் மிகவும் திறமை வாய்ந்த கலை நுணுக்கம் அதிகம் தெரிந்து முறையாக திரைப்படம் எடுக்கும் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர் பல்வேறு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். பிரபல இயக்குனரான ராமிடன் உதவி இயக்குனராக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருக்கிறார்.
அவரிடம் திரை நுணுக்கங்களை கற்றுத்தெறிந்து திரைத்துறையில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். பிரபல வார இதழ் பத்திரிகையான “மறக்க நினைக்கிறேன்” என்ற தொடரை எழுதியுள்ளார். தமிழில் பெரியேறும் பெருமாள் படத்தை இயக்கி மாபெரும் வெற்றிப்படைத்தார். திருநெல்வேலிக்குப் அருகில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத்தை தொழிலாக கொண்ட பெற்றோருக்கு பிறந்த மாரி செல்வராஜ் கிராமங்கள் சார்ந்த படங்களை இயக்குவதிலேயே ஆர்வமிக்கவராக இருக்கிறார்.
இவர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு தற்போது மாமன்னன் படத்தை இயக்கி அண்மையில் அப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று நல்ல வசூலும் ஈட்டியது. இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய பிரபல காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி, “எல்லாரும் படத்தை பார்த்துவிட்டு வெளியில் வந்தால் காறித்துப்பனும். அப்படியிருந்தால் அந்த படம் மாபெரும் ஹிட். இப்போ சமீபத்தில் வெளியான மாமன்னன் படமும் அப்படித்தான்.
இப்போயெல்லாம் புதுசா ஒரு பார்முலா கண்டுபிடிச்சியிருக்காங்க. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி படம் எடுத்தால் அது பரபரப்பா ஓடிடும். கீழ் தட்டு மேல்தட்டு என படமெடுக்கிறார்கள். 100 நாட்கள் 175 நாட்கள் ஓடிய மிகப்பெரிய இயக்குனர்களெல்லாம் இங்கு இருக்கிறார்கள்.இந்த மாதிரி கான்செப்டில் படம் எடுப்பதில் இருந்து எல்லோரும் கொஞ்சம் வெளியில் வரவேண்டும் என ஒரு காமெடியான இல்லாமல் தமிழனா வேண்டுகோள் வைக்கிறேன் என கூறி மாரி செல்வராஜை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
அண்ணாச்சியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு மாமன்னன் பட ரசிகர்கள் “காலடி மண்ணை எடுத்து நெற்றியில் வைத்து கொள்ளும் படங்கள் பிரச்சனை இல்லை. ஆனால் நான் ஏன்டா உன் காலடி மண்ணை எடுத்து நெற்றியில் வைக்க வேண்டும் என்று கேட்கும் படம் எடுத்தால் இவர்களுக்கு பிரச்சனை என விளாசித்தள்ளியுள்ளனர்.
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
This website uses cookies.