இசையமைப்பாளர் டி.இமான் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட அவருக்கு வெரோனிகா, பிளெஸிகா என இரு மகள்கள் இருக்கிறார்கள். இதற்கிடையே இமான் – மோனிகா இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இதையடுத்து அமலி உபால்டு என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார். ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வந்த டி. இமான் பின்னர் திடீரென மார்க்கெட் சரிந்துவிட்டார். இதையடுத்து கிட்டத்தட்ட பீல்டு அவுட் ஆன இசையமைப்பாளராகி விட்டார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றிவிட்டதாக. அவர் மிகப்பெரிய துரோகி என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “சிவகார்த்திகேயன் கடின உழைப்பாளி என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. மனம் கொத்தி பறவை படத்தில் ஆரம்பித்த அவருடனான பயணம் பல படங்களில் தொடர்ந்தது. ஆனால் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்.
அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று தடாலடியாக கூறினார். இவ்வளவு வெறுப்புக்கு என்ன காரணம் என கேட்டதற்கு… சம்பவத்தை வெளியில் சொல்ல முடியாது. பார்ப்பதற்கு தான் அவர் நல்ல மனிதர் என்னிடம் அன்பாக பேசிக்கொண்டே எனக்கு எதிரான வேலைகள் செய்துவந்ததை நான் தாமதமாக தான் புரிந்துக்கொண்டேன்.
எனக்கு ஏன் இப்படி துரோகம் செய்தாய்? என நான் பலமுறை கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இந்த இடத்தில் என்னால் சொல்லமுடியாது. இந்த ஊர் என்னை நல்லவன், கெட்டவன் என என்ன சொன்னாலும் பரவாயில்லை. எனக்கு தெரியும் நான் யார் என்று… என்னை படைத்தவனுக்கு தெரியும் நான் யார் என்று என ஆதங்கப்பட்டு பேசினார். டி. இமானின் இந்த பேச்சு கோலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு பேட்டியில் கூறியதாவது, காலம் முழுக்க சிவகார்த்திகேயன் டி. இமானுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறார். ஆனால், அந்த நன்றி மறந்து சிவகார்த்திகேயன் இமானுக்கு மிகப்பெரிய துரோகம் ஒன்றை செய்துள்ளார். அதை நம்மால் வெளியே சொல்ல முடியாது. இமானாலும் கூட அதை வெளியே சொல்ல முடியாது என்று தெரிவித்து இருந்தார்.
இந்த பிரச்சனைக்கு காரணம் இமானின் முதல் மனைவியுடன் சிவகார்த்திகேயனுடன் தொடர்பில் இருந்ததாகவும், இதனால் இவர்களுக்கு இடையே சண்டை வந்ததாகவும், இதுபோன்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இமானின் முதல் மனைவி சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஒரு பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, நான் ஒரு முட்டள் 12 ஆண்டு காலம் உங்களுடன் சேர்ந்து என் வாழ்க்கையை வீணாக்கி விட்டேன். உங்களுடைய சொந்த குழந்தையை கூட நீங்கள் சரியாக பார்த்துக் கொள்ளவில்லை. இப்போது நீங்கள் அவர்களையும் ரீப்ளேஸ் செய்து விட்டீர்கள் நான் என்னுடைய குழந்தைகளை உங்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வேன். தேவைப்பட்டால் புதிய குழந்தையும் பாதுகாப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.