ஆபாச சேட், அடிக்கடி ஸ்டுடியோவில் ரிகர்சல்.. இமானின் முகத்திரையை கிழித்த மோனிகா..!
Author: Vignesh25 October 2023, 6:16 pm
இசையமைப்பாளர் டி.இமான் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட அவருக்கு வெரோனிகா, பிளெஸிகா என இரு மகள்கள் இருக்கிறார்கள். இதற்கிடையே இமான் – மோனிகா இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இதையடுத்து அமலி உபால்டு என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார். ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வந்த டி. இமான் பின்னர் திடீரென மார்க்கெட் சரிந்துவிட்டார். இதையடுத்து கிட்டத்தட்ட பீல்டு அவுட் ஆன இசையமைப்பாளராகி விட்டார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றிவிட்டதாக. அவர் மிகப்பெரிய துரோகி என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “சிவகார்த்திகேயன் கடின உழைப்பாளி என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. மனம் கொத்தி பறவை படத்தில் ஆரம்பித்த அவருடனான பயணம் பல படங்களில் தொடர்ந்தது. ஆனால் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்.
அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று தடாலடியாக கூறினார். இவ்வளவு வெறுப்புக்கு என்ன காரணம் என கேட்டதற்கு… சம்பவத்தை வெளியில் சொல்ல முடியாது. பார்ப்பதற்கு தான் அவர் நல்ல மனிதர் என்னிடம் அன்பாக பேசிக்கொண்டே எனக்கு எதிரான வேலைகள் செய்துவந்ததை நான் தாமதமாக தான் புரிந்துக்கொண்டேன்.
Don’t know what issue between Imman & Siva Karthikeyan !!
— 𝗞𝗼𝗹𝗹𝘆𝘄𝗼𝗼𝗱 𝗧𝗮𝗹𝗸𝘀 (@kollywoodtalks) October 16, 2023
Anyone knows the reason ?? pic.twitter.com/3UjkOOCY8w
எனக்கு ஏன் இப்படி துரோகம் செய்தாய்? என நான் பலமுறை கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இந்த இடத்தில் என்னால் சொல்லமுடியாது. இந்த ஊர் என்னை நல்லவன், கெட்டவன் என என்ன சொன்னாலும் பரவாயில்லை. எனக்கு தெரியும் நான் யார் என்று… என்னை படைத்தவனுக்கு தெரியும் நான் யார் என்று என ஆதங்கப்பட்டு பேசினார். டி. இமானின் இந்த பேச்சு கோலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு பேட்டியில் கூறியதாவது, காலம் முழுக்க சிவகார்த்திகேயன் டி. இமானுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறார். ஆனால், அந்த நன்றி மறந்து சிவகார்த்திகேயன் இமானுக்கு மிகப்பெரிய துரோகம் ஒன்றை செய்துள்ளார். அதை நம்மால் வெளியே சொல்ல முடியாது. இமானாலும் கூட அதை வெளியே சொல்ல முடியாது என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இமானின் முதல் மனைவி இது தொடர்பாக பேசியுள்ளார். அதில் அவர் சிவகார்த்திகேயன் எங்கள் குடும்ப நண்பர் நானும் இமானும் பிரியக்கூடாது என்று நினைத்தார். எங்களுக்குள் விவாகரத்து நடக்க கூடாது என்று சமாதானம் பேசினார். இமானோட விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் பண்ணல. அவர் நியாயத்தின் பக்கம் நின்றார். சிவகார்த்திகேயன் மேல எந்த தப்பும் இல்லை என்று இமானின் முதல் மனைவி மோனிகா பேசியுள்ளார்.
இந்நிலையில், இமான் மற்றும் அவரது முதல் மனைவி மோனிகா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் விவாகரத்துக்கான காரணம் குறித்து தற்போது ஒரு தகவல், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது இமான் பாடகிகளுடன் ஆபாச சேட்டிங் செய்து வருவதாகவும், இதனை அவருடைய மனைவி கண்டித்ததாகவும், இந்த நிலையில் மனைவி இருக்கும் போதே வேறொரு பெண்ணிடம் ஆபாசமாக பேசுவதை யாராவது ஏற்றுக் கொள்வார்களா இதை வைத்துதான் மோனிகாவிடம் சண்டை போட்டு விரிசல் ஏற்பட காரணமாக அமைந்தது.
அடிக்கடி ஆபாச சேட் ஸ்டுடியோவில் ரிகர்சல் என்று இமான் நாட்களை கழித்து வந்ததால், இதையெல்லாம் யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று நினைத்த மோனிக்கா நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயனுடன் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார். இதை பார்த்து சிவகார்த்திகேயன் இமானுக்கு ஆதரவாக பேசவில்லை என்பதால் தான் இமான் துரோகம் என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக மௌனமாக இருக்கும் சிவகார்த்திகேயன் பேசினால் தான் என்ன உண்மை என்பது தெரியவரும் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.