சிவகார்த்திகேயனுக்கு நேரமே சரியில்லை போல.. ரஜினி மகளால் புதுசா இன்னொரு பிரச்சனை வேறயா?
Author: Vignesh18 October 2023, 11:00 am
இசையமைப்பாளர் டி.இமான் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட அவருக்கு வெரோனிகா, பிளெஸிகா என இரு மகள்கள் இருக்கிறார்கள். இதற்கிடையே இமான் – மோனிகா இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இதையடுத்து அமலி உபால்டு என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார். ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வந்த டி. இமான் பின்னர் திடீரென மார்க்கெட் சரிந்துவிட்டார். இதையடுத்து கிட்டத்தட்ட பீல்டு அவுட் ஆன இசையமைப்பாளராகி விட்டார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றிவிட்டதாக. அவர் மிகப்பெரிய துரோகி என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இதனால், சிவகார்த்திகேயனின் ஒட்டுமொத்த புகளும் ஒரே இரவில் தலைகீழாகி விட்டது.
பிரபல இசையமைப்பாளர் இமான் பிரச்சனை ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க மற்பொரு பிரச்சனை ஒன்று வந்துள்ளது. அதாவது, சிவகார்த்திகேயன் அயலான் படம் பொங்கல் அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், அந்த சமயத்தில் வேறு எந்த படமும் வராமல் இருக்கும், நல்ல கலெக்ஷனை படம் அள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அயலான் படம் வெளியாக இருக்கும் நேரத்தில், விக்ரமின் தங்கலான், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் லால்சலாம் பாலாவின் வணங்கான் திரைப்படம் பொங்கல் ரிலீஸ் அன்று வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அயலான் கலெக்ஷன் பாதிப்பு ஏற்படும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.