இமான் பத்தி பேசினா சிவகார்த்திகேயன் சிக்கிருவாரு.. சட்டையை புடிச்சு கேட்டிருக்கலாம்.. பிரபலம் ஓபன் டாக்..!

Author: Vignesh
29 December 2023, 3:15 pm

ஒரு சில மாதங்களாக அவ்வப்போது இணையதளத்தில் இமான் குறித்த சர்ச்சை எழுந்து தான் வந்து கொண்டிருக்கிறது. அதாவது, சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக இசையமைப்பாளர் இமான் ஒரு பேட்டி ஒன்றில், குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டது.

sivakarthikeyan-updatenews360

தற்போது, வரை இமான் பேச்சுக்கு சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. சமீபத்தில், அவர் கலந்து கொண்ட பேட்டிகளிலும் கூட இமான் பற்றி வாய் திறக்கவில்லை. தன் மீது எழுந்த குற்றச்சாட்டுக்கு விளக்கமும் அளிக்கவில்லை.

இந்நிலையில், சினிமா பத்திரிகையாளர் அந்த அந்தணன் சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அதில், அவர் தன்மீது குற்றச்சாட்டு வைத்திருக்கும் இமான் பற்றி சிவகார்த்திகேயன் பேசாமல் இருக்க காரணம் அவர் இமான் பேச்சை இழுத்தாலே மாட்டிக் கொள்வார் என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது. நியாயம் இருந்திருந்தால் தவறாக பேசியவரை சட்டை பிடித்துக் கூட கேட்டிருக்கலாம். ஆனால், தன் பக்கம் நியாயம் இல்லாத காரணத்தினால் எதையாவது பேசி மழுப்ப வேண்டியது தான் என்று அந்தணன் சிவகார்த்திகேயன் குறித்து தெரிவித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி