SK-வுடன் அந்த உறவில் மோனிகா?.. எல்லாம் அவர் பார்த்துக்குவார்.. மௌனம் களைத்த இமான்..!
Author: Vignesh1 November 2023, 4:28 pm
கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமானின் சண்டை தான் சினிமாவின் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. பிரபல இசையமைப்பாளர் டி. இமான் சமீபத்திய பேட்டி ஒன்றில், ” சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றிவிட்டதாக. அவர் மிகப்பெரிய துரோகி என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “சிவகார்த்திகேயன் கடின உழைப்பாளி என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. மனம் கொத்தி பறவை படத்தில் ஆரம்பித்த அவருடனான பயணம் பல படங்களில் தொடர்ந்தது. ஆனால் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்.

அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று தடாலடியாக கூறினார். இவ்வளவு வெறுப்புக்கு என்ன காரணம் என கேட்டதற்கு… சம்பவத்தை வெளியில் சொல்ல முடியாது. பார்ப்பதற்கு தான் அவர் நல்ல மனிதர் என்னிடம் அன்பாக பேசிக்கொண்டே எனக்கு எதிரான வேலைகள் செய்துவந்ததை நான் தாமதமாக தான் புரிந்துக்கொண்டேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் தான் இமான் மோனிகா பிரியவே காரணம் என்று நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டனர்.

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இமானிடம் பத்திரிக்கையாளர் நீங்கள் இந்த விஷயத்திற்கு எப்போதும் முற்றுப்புள்ளி வைப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த இமான் இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. அவருக்கு தெரியும் எது சரி எது தவறு என்று, அதை நான் நம்புகிறேன். இந்த விஷயத்திற்கு இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார் என்று இமான் பேசியுள்ளார்.