பார்ட் 2 படங்களால் தியேட்டர்கள் கவலைக்கிடம்
ஒரு காலத்தில் மக்கள் அனைவரும் தியேட்டர் சென்று படம் பார்க்க ஆர்வம் காட்டி வந்தனர்,அதிலும் குறிப்பாக பொங்கல்,தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் அஜித்,விஜய் படங்கள் ரிலீஸ் ஆனால் தியேட்டர் ஓனர்களை கையிலே பிடிக்க முடியாது.
தற்போது அதற்கு எதிராக புது படம் ரிலீஸ் ஆனால்,இந்த படம் எப்போ,எந்த தேதியில் OTT-யில் வரும் என காத்திருந்து படத்தை பார்க்கின்றனர்.இது ஒரு புறம் இருக்க,தமிழ் சினிமாவில் சமீப காலமாக பார்ட்2 வெர்சன் ட்ரென்ட் ஆகி வருகிறது.
இதனால் தியேட்டர் ஓனர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.புஷ்பா2-வை தவிர தமிழில் வெளியான சண்டக்கோழி 2,சாமி 2, இந்தியன் 2, சூது கவ்வும் 2 என பல படங்கள் மண்ணை கவ்வியது.
இதையும் படியுங்க: நடிகர் சிவராஜ்குமார் எப்படி இருக்கிறார்…அமெரிக்காவில் இருந்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!
அதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சங்கரின் இந்தியன் 2 படம் தியேட்டரில் சுத்தமாக எடுபடவில்லை.லப்பர் பந்து,வாழை போன்ற சிறு படங்கள் தான் எங்களுக்கு கை கொடுத்தது எனவும் ,மேலும் மஞ்சுமெல் பாய்ஸ் படமுமும் விஜயின் ரீ-ரிலீஸ் படமாக வெளிவந்த கில்லி படமும் எங்களை போன வருடம் நஷ்டத்தில் இருந்து காப்பற்றியது என தியேட்டர் ஓனர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.