தனுஷ், அமலா பாலுக்கு ரெட் கார்டு?.. பப்புக்கு போக தெரியுது படத்துக்கு வர தெரியாதா?.. பரபரக்கும் கோலிவுட்..!

Author: Vignesh
3 July 2023, 10:30 am

தேனாண்டாள் முரளி தலைமையில் சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுத்திருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

இதில், படத்தில் நடிப்பதாக கூறிவிட்டு தயாரிப்பாளர்களிடம் பணத்தை வாங்கி நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்த பல நடிகர், நடிகைகளுக்கு ரெட் கார்டு கொடுக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளார்களாம்.

வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் சிம்பு மீது புகார் கொடுத்துள்ளதாம். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் தனுஷ் மீதும் புகார் பாய்ந்து உள்ளதாம். மேலும், இந்த லிஸ்டில் அமலபால், எஸ்.ஜே.சூர்யா, விஷால், யோகி பாபு மற்றும் அதர்வா போன்ற பல நட்சத்திரங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டு வந்தது.

முன்னதாக, நடிகர் வடிவேலு, சிம்பு உள்ளிட்ட பிரபலங்களுக்கு இப்படி ரெட் கார்டு போடப்பட்டு நடிக்க முடியாமல் இருந்து ஒரு சில இடைவெளிக்குப்பின் மீண்டும் நடிக்க தொடங்கினர்.

இப்படியான நிலையில், தற்போது நடிகர் தனுஷ், அமலாபால், ராய் லட்சுமி உள்ளிட்ட 14 பிரபலங்களுக்கு ரெட் கார்டு போட தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோலிவுட்டில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!