அந்த விஷயத்தில் நானும் பாதிக்கப்பட்டேன்.. எங்களுக்கும் குடும்பம் இருக்கு ; நடிகை ரித்திகா சிங் வேதனை
Author: Babu Lakshmanan28 February 2023, 2:02 pm
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது.
இந்த நிலையில், பாண் இந்தியா படமான “இன் கார்” என்ற தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரித்திகா சிங் நடித்துள்ளார். தமிழில் ஸ்டுடியோஸ் கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ ஞானவேல் வெளியிடும் இப்படம் வரும் மார்ச் 3ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ரித்திகா சிங் பேசியது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் பேசியதாவது :- “இன் கார்” படத்தில் நடிப்பதற்கு மிகவும் சவாலாக இருந்தது. கடத்தலுக்கு உள்ளாகும் பெண் எப்படியெல்லாம் பிரச்னைகளை சந்திக்கிறாள், அதனால் அவருக்கு எந்த விதமான மனசிதைவுக்கு உள்ளாகிறார் என்பதை இப்படம் கூறுகிறது. என்னால் இந்த படத்தில் நடித்த பிறகும் வெளியில் வரமுடியவில்லை. அந்த அளவிற்கு பெரும் பாதிப்பை இப்படம் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது.மேலும் இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த இயக்குனருக்கு நன்றி.
சமீப காலமாக சினிமாவில் நடிக்கும் கதாநாயகிகளின் புகைப்படங்களை கட் செய்தும் எடிட் செய்தும் ஆபாசமாக மீம்ஸ்களை போட்டு வருகின்றனர். நான் கூட இந்த பிரச்னையை சந்தித்திருக்கிறேன். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. உங்களை போலவே எங்களுக்கும் குடும்பம், நண்பர்கள் இருக்கின்றனர் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே இது போன்ற ஆபாசமான மீம்ஸ் போடுவதற்கு முன்னர் ஒன்றிற்கு இரண்டு முறை யோசியுங்கள், எனக் கூறினார்.