பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் திரைப்படத் துறையில் மிகவும் புகழ் பெற்றவர் “ஹம் சாத் சாத் ஹே,” “ரெடி,” “பாடிகார்ட்,” “ஏக் தா டைகர்,” “கிக்,” “பஜ்ரங்கி பைஜான்,” மற்றும் “சுல்தான்” போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்ததற்காக அறியப்பட்ட சல்மான், நடிகராக, திரைப்பட தயாரிப்பாளராக மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளராக குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ளார். சினிமாவில் அவரது பயணம் அவரை மிகவும் வெற்றிகரமான மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக மாற்றியது.$400 மில்லியனுக்கும் அதிகமாக சொத்தை சேர்த்து வைத்துள்ளார் என சொல்லப்படுகிறது.
சல்மான் கான் ஆடம்பர டைம்பீஸ்களில் அதிக ஆர்வம் கொண்டவர். தொழில் நுட்பத்தை பிரதிபலிக்கும் நேர்த்தியான மற்றும் அரிய கடிகாரங்களை அணிவது இவருக்கு விருப்பாமாம் .
அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்சண்ட் திருமண விழா பாலிவுட்டில் களை கட்டியுள்ளது. தினமும் நடக்கும் விழாக்களில் பங்கேற்று வருகிறார் சல்மான் கான். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடந்த ஹல்தி விழாவில் கருப்பு குர்தா அணிந்து வந்தார். ஒரு கையில் பிரேஸ்லெட்டும் மறு கையில் வாட்ச்சும் அணிந்திருந்தார்.
இப்போது அந்த வாட்ச் குறித்த பேச்சு இணையத்தில் டிரெண்ட் ஆகி உள்ளது.அந்த விழாவில் அவர் படேக் பிலிப் அக்வானாட் லூஸ் ரெயின்போ 5260/1455R அணிந்து வந்தார்,
டயலில் பன்னிரண்டு பலவண்ண சபையர் மணிகள், ஒரு வைர மணி, ஒரு ரூபி-செட் மற்றும் ஒரு நீல சபையர்-செட் மினிட் ஹேண்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது,
அதன் விலையை பார்த்த நெட்டிசன்கள் வாய் பிளந்து நிற்கின்றனர். அதன் விலை இந்திய மதிப்பில் 21 கோடியாம்.
அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான கல்கி 2898ஏடி படத்தில் நடிக்க உலக நாயகன் கமல் ஹாசனுக்கு 20 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறார்கள். சல்மான் கான் வாட்ச்சின் விலை 21 கோடி.அவருக்கென்ன அவர் சிங்கிள்.விருப்பப்பட்டதை ஜாலியாய் செய்கிறார் என தங்களுக்குள் இணைய வாசிகள் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…
5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
This website uses cookies.