2020ம் ஆண்டு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் லியோன் ஜேம்ஸ் இசையில் வெளியான திரைப்படம் ‘ஓ மை கடவுளே’. அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் இளசுகள் பேராதரவுடன் பெரிய ஹிட் அடித்தது.
மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி கடவுளாக கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தின் வெற்றி குறித்து படக்குழு சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தனர். அப்போது இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து செய்த செயல் குறித்து அசோக் பேசியது பெரிய ஆச்சர்யத்தை தந்துள்ளது.
அதாவது இந்த படத்தின் படப்பிடிப்பின் போது கதாநாயகி ரித்திகா பாத்ரூம் போக வேண்டும் என படப்பிடிப்பை நிறுத்திவிட்டு லாட்ஜிற்கு சென்றாராம். சிறிய பட்ஜெட் திரைப்படம் என்பதால் சாதாரண லாட்ஜில் தான் ரூம் போட்டுள்ளார்கள். அதில் ஒரே ஒரு பாத்ரூம் தான் இருந்துள்ளது. ரித்திகா அந்த பாத்ரூமை எட்டி பார்த்துவிட்டு சுத்தமாக இல்லை என சொல்லி பேசியுள்ளார்.
படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து உடனடியாக அந்த பாத்ரூமை சுத்தம் செய்து கொடுத்திருக்கிறார். ஒரு இயக்குநர் கதாநாயகிக்காக பாத்ரூம் கழுவியது உண்மையாகவே ஆச்சரிய பட வைத்துள்ளது. இந்த விஷயத்தை படத்தின் கதாநாயகன் அசோக் செல்வன் அஸ்வத் மாரிமுத்து முன்னிலையிலேயே பாராட்டி தெரிவித்திருக்கிறார்.
அதன் பின்னர் பேசிய அஸ்வத் மாரிமுத்து, ‘ரித்திகா என்னுடைய தோழி. அவருக்கு பாத்ரூம் அர்ஜெண்டாக இருக்கும்போது, அந்த இடத்தில் உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தானே கழிப்பறையை சுத்தம் செய்து அவருடைய பிரச்சனையை தீர்த்து வைத்தேன். இதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை, அதை பெருமையுடன் செய்தேன். அதுமட்டுமல்ல என்னுடைய படப்பிடிப்பிற்கு எந்த காரணத்தாலும் தடங்கள் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்’ என்று அஸ்வத் மாரிமுத்து ரொம்பவே எதார்த்தமாக பேசியுள்ளார்.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.