வருமான வரி செலுத்தும் டாப் 3 இடத்தில் விஜய்.. பாலிவுட்டின் நடுவே ஒருவர் தானா?

Author: Hariharasudhan
29 November 2024, 2:39 pm

வருமான வரி செலுத்துபர்களில் 2023 – 2024ஆம் நிதியாண்டில் 2வது இடத்தில் நடிகர் விஜய் இருக்கிறார்.

டெல்லி: 2023 – 2024ஆம் நிதியாண்டில் பெறப்பட்ட நிதி விவரங்களின் அடிப்படையில் அதிக வருமான வரி செலுத்தும் திரை மற்றும் விளையாட்டு பிரபலங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதன்படி, 2023 – 2024ஆம் நிதியாண்டில் மிக அதிகமான வருமான வரி தொகை செலுத்திய நபர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதல் இடத்தில் உள்ளார்.

ஷாருக்கான், சுமார் 92 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தி உள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் 80 கோடி ரூபாய் வருமான வரி தொகை செலுத்தி 2ஆம் இடத்தில் இருக்கிறார்.

இதற்கு அடுத்ததாக, 75 கோடி ரூபாய் வருமான வரியுடன் சல்மான்கான் மூன்றாம் இடத்திலும், 71 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தி அமிதாப் பச்சன் நான்காம் இடத்திலும் உள்ளார். இதனையடுத்து, கிரிக்கெட் வீரர் விராட் கோலி 66 கோடி ரூபாய் வருமான வரித் தொகையுடன் 5-ஆம் இடத்திலும் இருக்கிறார்.

MS Dhoni IT Payers

அதேநேரம், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ரசிகர்களால் தல என அன்போடு அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி 38 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரிச் செலுத்தி உள்ளார். இந்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் உள்ளனர்.

இதையும் படிங்க: கணவராகும் காதலர்… திருப்பதி ஏழுமலையானிடம் உருகி உருகி வேண்டிய பிரபல நடிகை!

அதேபோல், திரைப் பிரபலங்களைப் பொறுத்தவரையில், அஜய் தேவ்கன், ரன்பீர் கபூர், கிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களே அதிக அளவில் உள்ளனர். இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் விஜய் மட்டுமே முன்னணி பட்டியலில், அதிலும் 2வது இடத்தில் இருக்கிறார்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 178

    0

    0