தொடர்ந்து பலி வாங்கும் இந்தியன்2 …அதிர்ச்சியில் தமிழ் ரசிகர்கள்..!

Author: Selvan
13 November 2024, 1:25 pm

காவு வாங்கும் இந்தியன் 2

கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய திரைப்படம் இந்தியன்2.இத்திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தோல்வி அடைந்து மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்துக்கு ஆளாகியது.

இதில் சேனாதிபதியாக கமல் நடித்து,சமூகத்திற்கு எதிராக செயல்படும் பலரை தன்னுடைய விரல் வித்தையால் பலி தீர்த்திருப்பார்.

indian 2 shooting accident

ஷூட்டிங் விபத்து

படத்தில் தப்பு பண்ணவங்கள கொல்லுறது இயற்கையான ஒன்று.ஆனால் நிஜத்தில் படத்தில் நடித்த நல்ல மனிதர்களை தொடர்ந்து காவு வாங்கிட்டு வருகிறது இந்தியன்2. அந்தவகையில் 2020 ,பிப்ரவரி 19 ஆம் தேதி சென்னை அருகே தனியார் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வந்த படப்பிடிப்பில் இரவு விபத்து நடைபெற்று அதில் மூன்று நபர்கள் உயிரிழந்தனர்.

மறைந்த நடிகர்கள்

அதன் பின்பு சிறிய இடைவெளிக்கு பிறகு ஷூட்டிங் ஆரம்பித்த நிலையில் படத்தில் கிருஷ்ணசாமி கதாபாத்திரத்தில் நடித்த நெடுமுடி வேணு 2021,அக்டோபர்11 ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் இறந்தார்.படத்தில் இவர் வரும் மீதி காட்சிகளை AI மூலம் எடுத்திருப்பார்கள்.

 indian 2 death actors

அடுத்ததாக தமிழ் திரையுலகின் முக்கிய காமெடி நடிகராக திகழ்ந்த விவேக் ஏப்ரல்2021, 17ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் காலம் ஆனார்.படத்தில் இவருடைய பகுதியும் AI பயன்படுத்தி இயக்குனர் எடுத்திருப்பார்.

இன்னொரு தமிழ் காமெடி நடிகரும் இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது மரணம் அடைந்தார். தன்னுடைய உடல் தோற்றத்தால் மக்களை சிரிக்க வைத்த நடிகர் மனோ பாலா.இவர் 2023,மே 3ஆம் தேதி இறந்தார்.அதன் பின்பு நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து நெஞ்சு வலி காரணமாக 2023,செப்டம்பர் 8ஆம் தேதி மரணம் அடைந்தார்.

தற்போது சமீபத்தில் நவம்பர்7ஆம் தேதி நடிகர் டெல்லி கணேஷ் உடல்நிலை சரியில்லாமல் அவரது இல்லத்தில் காலம் ஆனார். இவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இப்படி பலரை காவு வாங்கி கொண்டிருக்கும் இந்தியன்2 திரைப்படம் அடுத்த யாரை பலி வாங்க போகிறதோ என்ற அச்சத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர்..

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 464

    0

    0