பிரமாண்டம் என்ற பெயரில் ஓவர் பில்டப் …! மதிக்காத தயாரிப்பு நிறுவனம்.?

Author: Rajesh
22 February 2022, 5:39 pm

சங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் இந்தியன் 2. இந்தியன் 2 படப்பிடிப்பின்போது கிரேன் விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்ததையடுத்து, படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து, ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதன் பிறகு இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் வேலையில் மும்முரமாக இருந்தார் சங்கர் இதனையடுத்து அந்த படத்தினை பட்ஜெட்டை சரிபார்த்து, 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரை பட்ஜெட்டை குறைக்க போவதாக லைக்கா நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.

லைக்கா நிறுவனமும் பதில் கூறும் எதிர்பார்ப்பில் இருந்த சங்கருக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாம். லைக்கா தயாரிப்பு நிறுவனம் சங்கரை மதிக்கவே இல்லையாம். இதனால் ஷங்கர் மிகுந்த அப்செட்டில் இருக்கிறாராம். கமலஹாசனும் விக்ரம் படப்பிடிப்பில் மும்முரமாக இருப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்தியன்-2 படப்பிடிப்பு வேலை தொடங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் லைக்கா நிறுவனத்தின் இந்த செயலால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1492

    0

    0