ஒரு வழியா முடிந்தது “இந்தியன் 2” படப்பிடிப்பு … ரிலீஸ் தேதியுடன் புதிய அறிவிப்பு!

Author: Rajesh
2 January 2024, 3:35 pm

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் இந்தியன். ஷங்கர் இயக்கிய இப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்திருந்தார்கள்.

இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இது கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து பெரிதும் வெற்றிபெற்ற திரைப்படத்தின் இரண்டாம் பக்கம் தற்போது தயாராகி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இந்த முறை கமல்ஹாசன் , காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் உருவாகி ஒரு வழியாக இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் முடிந்துள்ளது.

எனவே அடுத்தடுத்த நாட்களில் இந்தியன் 2 படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம். மேலும், இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் .

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 407

    0

    0