3-வது நாளிலேயே படுத்துவிட்ட ‘இந்தியன் 2’ வசூல்.. வாஷ் அவுட் ஆன தியேட்டர்கள்..!

Author: Vignesh
15 July 2024, 9:23 am

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் இந்தியன். ஷங்கர் இயக்கிய இப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்திருந்தார்கள். இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இது கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து பெரிதும் வெற்றிபெற்ற திரைப்படத்தின் இரண்டாம் பக்கம் தற்போது ரிலீஸ் ஆகி உள்ளது.

இந்த முறை கமல்ஹாசன் , காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

indian 2

மேலும் படிக்க: சொகுசு கப்பலில் திருமணம்.. மகன் திருமணத்திற்காக ‘அந்த’ விஷயத்தை செய்யும் நெப்போலியன்..!

இப்படத்திற்கு பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களை வந்து கொண்டிருக்கிறது. படத்தின் நீளம் தான் இந்த விமர்சனங்களுக்கு காரணம் என்ன சொல்லப்பட்ட நிலையில், படத்திலிருந்து 20 நிமிட காட்சிகளை சங்கர் தூக்கி விட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் செய்த வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி, இப்படம் மூன்று நாட்களில் உலக அளவில் 130 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும், தமிழகத்தில் மட்டும் 40 கோடி வரை வசூல் செய்தியாகியுள்ளது. விக்ரம் மற்றும் கல்கி என அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களில் நடித்திருந்த கமல்ஹாசனின் கேரியரில் இப்படம் மிக முக்கியமானதாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. நிலைமை இப்படியே போனால், ரூ.100 கோடியை எட்டுவது கூட கடினம் என கூறப்படுகிறது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!