சேனாபதி அப்பா வீரசேகரன்;எகிறும் இந்தியன் 3 எதிர்பார்ப்பு;நேதாஜி பற்றி சொல்லுமா?..

Author: Sudha
12 July 2024, 3:31 pm

இந்தியன் 2 படத்தின் இறுதியில் இந்தியன் 3 படத்தின் டிரைலர் இடம்பெறும் என கேரளாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ஏற்கனவே கூறியிருந்தார்.அவர் சொன்னதை போலவே இன்று வெளியான இந்தியன் 2 படத்தின் இறுதியில் இந்தியன் 3 டிரெயிலர் வெளிடப்பட்டது. இந்த டிரைலரை சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் லீக் செய்து படக்குழுவுக்கு பயங்கர தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. படத்தின் முடிவில் ‘இந்தியன் 3’ படத்திற்கான முன்னோட்டக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

அதில் சுதந்திரப் போராட்டக் காலக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. முதல் பாகத்தில் சேனாபதி ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். இந்திய நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய நேதாஜியின் ராணுவத்தில் இருந்தவர் என சில காட்சிகள் மட்டும் இடம் பெற்றிருந்தது.

அந்த சம்பவத்தை விரிவுபடுத்தி சேனாபதியின் அப்பா வீரசேகரன் கதாபாத்திரமும் ‘இந்தியன் 3’ல் வர உள்ளது.இரண்டாம் பாகத்தில் அப்பா சேனாபதி மட்டும் இடம் பெற்றிருக்கும் நிலையில், மூன்றாம் பாகத்தில் சேனாபதி மற்றும் அவருடைய அப்பா வீரசேகரன் இடம் பெற உள்ளார்களாம்.இதில் சேனாபதி இளம் வயது தோற்றத்தில் உள்ளதாகவும் சுதந்திர போராட்டக் கதையாக இந்தியன் 3 இருக்கும் எனவும் சொல்லப் படுகிறது.

வீரசேகரன் மனைவியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார்.அவர் களரி சண்டையிடும் காட்சிகளும் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. 2025ம் ஆண்டில் ‘இந்தியன் 3’ வெளியாக உள்ளது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!