அஜித்தின் மேனேஜர் போட்ட திடீர் ட்வீட்.. விஜய் பற்றி புகழ்ந்து பேசிய தில் ராஜுவுக்கு பதிலடியா?
Author: Udayachandran RadhaKrishnan17 December 2022, 10:25 am
எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல் தொடர்ந்து விஜய் – அஜித் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் திரைப்படம் குறித்த அறிவிப்பு வந்தாலே, சமூக வலைத்தளங்கள் தொடங்கி திரையரங்குகள் வரை கொண்டாட்டமாக மாறிவிடும்.
தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களான விஜய், அஜித் படங்கள் வெளியாகும் போது, இருதரப்பு ரசிகர்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வார்கள் என்பது தெரிந்ததே. 2023ம் வருடம் பொங்கலுக்கு அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மோத உள்ள நிலையில், இந்த இரு படங்களிலுமே, அதிக ரசிகர்களைக் கொண்ட கோலிவுட் டாப் ஹீரோக்கள் நடித்துள்ளதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகவுள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். மேலும் பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். அதே போல், அஜித்தை வைத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ள இயக்குனர் எச்.வினோத் 3வது முறையாக இயக்கி அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் ஹார்டிக் வெற்றி பெறும் என அஜித் ரசிகர்கள் இந்த படத்தை வரவேற்க காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், விஜய்யை விட அஜித் பெரிய ஸ்டார் இல்லை, அதனால் வாரிசு படத்திற்கு தான் அதிக தியேட்டர் கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் தில் ராஜு கூறியது தற்போது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
No guts no glory !!! pic.twitter.com/MI2cxgVwbp
— Suresh Chandra (@SureshChandraa) December 16, 2022
இந்நிலையில், தற்போது அஜித்தின் PRO சுரேஷ் சந்திரா ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில் அஜித் பைக் ரைடு சென்ற ஒரு போட்டோவை பதிவிட்டு “No guts No glory !!!” என பதிவிட்டு இருக்கிறார். தில் ராஜுவின் பேச்சுக்கு பதிலடியாக தான் இப்படி ஒரு பதிவை அவர் போட்டாரா? என நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.